ஆப்கானுக்காக நன்கொடை கோரிக்கை தீவிரம்

ஜெனிவா: அடிப்­ப­டைச் சேவை­கள், உணவு, வெவ்­வேறு வகை­யான உதவி இவை அனைத்­துமே இல்­லாத நிலை ஏற்­ப­ட­வுள்­ள­தாக மனி­தா­பி­மான விவ­கார ஒருங்­கி­ணைப்­புக்­கான ஐக்­கிய நாட்டு அலு­வ­ல­கம் நேற்று தெரி­வித்­தது. ஜெனி­வா­வில் நடை­பெற்ற ஐக்­கிய நாட்டு அமைப்­பின் சந்­திப்­பின்­போது பேசிய அலு­வ­ல­கப் பேச்­சா­ளர், மில்­லி­யன் கணக்­கான ஆப்­கான் மக்­களுக்கு உண­வும் சுகா­தார உத­வி­யும் தேவைப்­ப­டு­வ­தா­கக் கூறி­னார்.

வெளி­நாட்­டி­னர் நன்­கொடை அளிப்­ப­தாக இருந்­தால், இந்த நெருக்­க­டிக்கு முத­லில் மிக தாரா­ள­மாக அளிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது.

தலி­பான் போரா­ளி­கள் ஆப்­கா­னுக்­குள் கால்­வைத்­தது முதல் அரை மில்­லி­ய­னுக்கு மேற்­பட்­டோர் தங்­க­ளின் இருப்­பி­டத்தை இழந்­து­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில், ஆப்­கா­னில் குறிப்­பாக உயிர்­க­ளைக் காப்­பாற்ற வேண்­டும் என்ற நிதிக்­காக கிட்­டத்­தட்ட 200 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$268 மி.) கோரப்­பட்­டுள்­ளது. இவ்­வாண்டு இறுதி வரை நன்­கொடை நீடிப்­ப­தற்கு மொத்­தம் 606 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் தேவைப்­ப­டு­வ­தா­க­வும் கூறப்­பட்­டது.

இந்­தத் தொகை, ஆப்­கா­னில் உள்ள கிட்­டத்­தட்ட 11 மில்­லி­யன் பேருக்கு உணவு மற்­றும் வாழ்­வா­தா­ரத்­திற்­குப் பயன்­ப­டுத்­தப்­படும். மேலும், 3.4 மில்­லி­யன் பேருக்கு அத்­தி­யா­வ­சிய சுகா­தா­ரச் சேவை­கள் வழங்­க­வும் பய­னா­கும்.

கிட்­டத்­தட்ட 20 ஆண்­டு­க­ளாக போர் நடந்­ததை அடுத்து தலி­பா­னின் கட்­டுப்­பாட்­டுக்­குள் உள்ள ஆப்­கா­னிஸ்­தான், மனி­தா­பி­மான பேர­ழி­வைச் சந்­திக்­கும் நிலை­யில் உள்­ளது என்று ஐக்­கிய நாட்டு அமைப்­பின் தலை­வர் ஆண்டோனியோ குட்டா­ரஸ் கடந்த வாரம் எச்­சரித்­தி­ருந்­தார். அடுத்த திங்­கட்­கி­ழ­மை­யன்று நடை­பெ­ற­வுள்ள அமைச்­சரவைக் கூட்­டத்­தில் இந்த விவ­கா­ரம் பற்றி பேசப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!