சிட்னி மக்களுக்கு விரைவில் சுதந்திரம்

சிட்னி: கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கார­ண­மாக வீட்­டில் முடங்­கிக் கிடக்­கும் சிட்னி மக்­க­ளுக்கு விரை­வில் சுதந்­தி­ர­மாக நட­மா­டு­வ­தற்­கான அனு­மதி கிடைக்­க­வி­ருக்­கிறது.

தடுப்­பூசி போடும் இலக்கு நிறை­வே­றி­ய­தும் அடுத்த மாதம் மக்­கள் வெளியே செல்ல அனு­ம­திக்­கப் ­ப­டு­வார்­கள்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஆகப்­பெரிய நக­ர­மான நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தின் தலை­ந­கர் சிட்­னி­யில் திடீ­ரென உரு­மா­றிய 'டெல்டா' கிருமி பர­வி­யது.

அந்­தக்­கி­ருமி அதி ­வே­கத்­தில் பர­வக்­கூ­டி­யது. இதை­ய­டுத்து ஜூலை­யி­லி­ருந்து சிட்னி முடக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் சிட்னி மக்­க­ளால் பெரி­தும் எதிர்­பார்க்­கப்­பட்ட 'சுதந்­தி­ரத்­திற்­கான வழி­காட்டி' திட்­டத்தை அர­சாங்­கம் நேற்று வெளி­யிட்­டது.

அதன்­படி மாநி­லம் முழு­வ­தும் 70 விழுக்­காடு பெரி­ய­வர்­க­ளுக்கு இரண்டு தடுப்­பூ­சி­கள் போடும் பணி நிறை­வே­றி­ய­தும் சிட்னி மக்­கள் சுதந்­தி­ர­மாக நட­மாட முடியும்.

நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் நேற்று 1.400 புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

இது, தின­சரி தொற்­றுச் சம்ப­வங்­களில் மற்­றொரு உச்­ச­மா­கும். இது­வரை கொவிட்-19 கிரு­மிக்கு 153 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

மாநில முதல்­வர் கிளா­டிஸ் பெர­ஜிக்­லி­யான், சமூ­கத்­தில் கிரு­மிப் ­ப­ர­வல் இருப்­பதை ஏற்று இயல்­பாக வாழக்­கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

சிட்னி முடக்­க­நி­லையை அகற்று­ வ­தற்­கான தேதியைத் தெரி­விக்க அவர் மறுத்­து­விட்­டார்.

தடுப்­பூசி போடும் இலக்கு நிறை­வே­றி­ய­தும் அடுத்து வரும் முதல் திங்­கட்­கி­ழ­மை­யில் சிட்னி திறக்­கப்­ப­ட­லாம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

தற்­போது மாநி­லத்­தில் 43 விழுக்­காடு பெரி­ய­வர்­க­ளுக்கு இரண்டு தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன.

ஏறக்­கு­றைய 75 விழுக்­காட்­டி­ன­ருக்கு முதல் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. இதே வேகத்­தில் தடுப்­பூசி போடும் பணி தொடர்ந்து நடை­பெற்­றால் அடுத்த மாதம் இலக்கை எட்ட முடி­யும் என அர­சாங்­கம் நம்­பு­கிறது.

அந்தச் சம­யத்­தில் கடை­களும் உண­வ­கங்­களும் வாடிக்­கை­யா­ளர் வரம்­பு­க­ளு­டன் திறக்­கப்­படும் என்று பெர­ஜிக்­லி­யான் தெரி­வித்­தார்.

பள்­ளி­கள் திறப்­பது பற்றி அவர் எது­வும் சொல்­ல­வில்லை.

முழு­மை­யாகத் தடுப்­பூசி ேபாட்­டுக் கொண்­ட­வர்­க­ளுக்கு மட்­டுமே சிறப்­பு­ரி­மை­கள் வழங்­கப்­படும் என்­றார் அவர்.

வீட்­டில் ஐவர் வரை ஒன்­று­கூ­ட­லாம், இரு­பது பேர் வரை­யி­லான வெளிப்­புற நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­க­லாம், மாநி­லம் முழு­வ­தும் சுற்றி வர­லாம் உள்­ளிட்ட உரி­மை­கள் அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும்.

தனி­ந­பர் இடைெவளி உள்­ளிட்ட கட்­டுப்­பா­டு­க­ளு­டன் கேளிக்கை விடு­தி­கள், மது­பா­னக் கூடங்­கள், சில்­ல­றைக் கடை­கள், உடற்­ப­யிற்­சிக் கூடம், விளை­யாட்டு நிலை­யங்­கள், முடி திருத்­தும் நிலை­யம், நக அழகு நிலை­யம், திரை­ய­ரங்­கு­கள், அருங்­காட்­சி­ய­கம், தேவா­ல­யம் மற்­றும் வழி­பாட்­டுத் தலங்­கள், கேளிக்கை பூங்­காக்­கள் போன்­றவை திறக்கவும் அனு­ம­தி­ய­ளிக்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!