ஆஸ்திரேலியாவில் கிருமித்தொற்று அதிகரிப்பு

மெல்­பர்ன்: கிரு­மிப் பர­வ­லைக்

கட்­டுப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் இருந்து படிப்­ப­டி­யாக மாறி கிரு­மித்­தொற்­றுக்கு மத்­தி­யில் வாழத் தொடங்­கி­யுள்ள ஆஸ்­தி­ரே­லி­யா­வில் நேற்று மேலும் 1,607 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­னர்.

இதில் விக்­டோ­ரி­யா­வில் மட்­டும் 507 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இங்கு பல வாரங்­க­ளாக முடக்க நிலை நடப்­பில் உள்­ளது.

புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் இருந்­தா­லும் இல்­லை­யென்­றா­லும் 70% தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வு­டன் முடக்­க­நிலை தளர்த்­தப்­படும் என்று சொன்­னார் மாநில முதல்­வர் டேனி­யல் ஆண்ட்­ரூஸ்.

ஆனால் அந்த இலக்கை அடை­வ­தற்கு அக்­டோ­பர் 26ஆம் தேதி ஆகக்­கூ­டும் என்­றும் அவர் சொன்­னார்.

விக்­டோ­ரி­யா­வில் இது­வரை 43 விழுக்­காட்­டி­னரே தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் அண்டை நாடான நியூ­சி­லாந்­தில் நேற்று மேலும் 24 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். அனைத்து தொற்று சம்­ப­வங் களும் ஆக்­லாந்­தில் பதி­வா­னவை.

கடந்த சில நாட்­க­ளாக குறைந்த தொற்று சம்­ப­வங்­களே பதி­வாகி வந்த நிலை­யில், நேற்று அது சற்றே உயர்ந்­தது.

எனவே சென்ற மாத மத்­தி­யிலிருந்து தீவிர முடக்­க­நி­லை­யில் உள்ள ஆக்­லாந்து நக­ரில் கட்­டுப்­

பா­டு­கள் தளர்த்­தப்­ப­டுமா என்­பது குறித்து கேள்வி எழுந்­த­துள்­ளது.

இது குறித்து பிர­த­மர் ஜெசிந்தா ஆர்­டென் இன்று முக்­கிய அறி­விப்பை வெளி­யி­டு­வார் என்று எதிர்­பார்க்­கப்­

ப­டு­கிறது.

கிரு­மிப் பர­வல் தொடங்­கி­ய­தில் இருந்து அங்கு 3,700 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். 27 பேர் மாண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!