80% தடுப்பூசி இலக்கை எட்டியது மலேசியா

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் பெரி­ய­வர்­கள் மக்­கள்­தொ­கை­யில் 80 விழுக்­காட்­டி­ன­ருக்கு முழு­மை­யாக தடுப்­பூசி போடும் இலக்கை மலே­சியா நேற்று எட்­டி­யது.

இதைத் தனது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டி­ருந்த சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தின், எஞ்சி

உள்ள 20 விழுக்­காட்­டி­ன­ரும் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதை கொவிட்-19 சிறப்­புக் குழு உறுதி செய்­யும் என்­றும் சொன்­னார்.

இதை­ய­டுத்து, பதின்ம வய­தி­ன­ருக்­கும் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்

­கூ­டி­ய­வர்­க­ளுக்குக் கூடு­தல் தடுப்­பூசி போடு­வ­தி­லும் கவ­னம் செலுத்த தொடங்­கி­யுள்­ளது மலே­சியா.

அந்த வகை­யில் மலே­சி­யா­வில் பதின்ம வய­தி­னர் தடுப்­பூசி நிலை­யங்­க­ளுக்கு நேர­டி­யாக சென்று தடுப்­பூசி போட்­டுக்கொள்­ளும் திட்­டம் நாளை முதல் தொடங்­கு­கிறது.

பள்­ளி­கள் வழங்­கும் அட்ட

வணைப்­படி 12 முதல் 17 வய­துக்கு உட்­பட்­ட­வர்­க­ளுக்­கான தடுப்­பூசி போடும் பணி மேற்­கொள்­ளப்­படும் என்று துணை சுகா­தார அமைச்­சர் டாக்­டர் நூர் அஸ்மி கஜாலி கூறி­னார்.

பள்ளி செல்­லா­த­வர்­கள் அரு­கில் உள்ள எந்­த­வொரு தடுப்­பூசி நிலை­யத்­திற்­கும் சென்று தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம் என்­றும் அவர் சொன்­னார்.

இதன் மூலம் 12 முதல் 17 வய­து­டைய 3.2 மில்­லி­யன் பதின்ம வய­தி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நவம்­பர் மாதத்­திற்­குள் 60 விழுக்­காட்டு பதின்ம வய­தி­ன­ருக்கு தடுப்­பூசி போட வேண்­டும் என்ற நோக்­கத்­தில் செயல்­படும் சிறப்­புக் குழு, 2022ல் பள்­ளித் திறக்­கப்­ப­டு­வ­தற்­குள் அனைத்து பதின்ம வய­தி­ன­ருக்குத் தடுப்­பூசி போடு­வ­தற்­கான இலக்கை நிர்­ண­யித்துள்ளது.

அத்துடன் அக்­டோ­பர் முதல் வாரத்­தி­லி­ருந்து எளி­தில் பாதிக்­கப்­ப­டு­வோர், முன்களப் பணியாளர் களுக்கு 'பூஸ்டர்' தடுப்­பூசி போட­வும் மலே­சியா திட்­ட­மிட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, கட்­டுப்­பா­டு­களை மேலும் தளர்த்தி, உள்­நாட்டுப் பய­ணத்தை மீண்­டும் தொடங்­கு­வ­தற்­கான திட்­டம் ஜென்­டிங் ஹை லண்ட்ஸ், மலாக்கா, தியோ­மன் தீவுகளுக்கும் விரி­வு­ப­டுத்­தப்பட உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!