மலேசிய பொருளியலை மீட்க பெருந்திட்டம்

கோலா­லம்­பூர்: அதிக வேலை வாய்ப்­பு­கள், கட்­டுப்­ப­டி­யா­கக் கூடிய வீடு­கள், வறுமை ஒழிப்பு ஆகிய வற்­று­டன் மலே­சி­யர்­க­ளின் வாழ்க்­கைத் தரத்தை மேம்­ப­டுத்தி நாட்­டின் பொரு­ளி­யலை மீட்­டெ­டுக்­கும் இலக்­கு­டன் 12வது மலே­சி­யத் திட்­டத்தை அந்­நாட்­டுப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­தார்.

'செழிப்­பான, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய, நீடித்த நிலைத்­தன்மை கொண்ட மலே­சியா' எனும் கருப்­பொ­ரு­ளு­டன் இந்த

ஐந்­தாண்­டுத் திட்­டம் நடை­மு­றைப்

படுத்­தப்­ப­டு­கிறது.

சமூக நலம், ஊழி­யர்­க­ளுக்­கும் பொது­மக்­க­ளுக்­கும் பாது­காப்பு ஆகி­ய­வற்­றில் இந்த வருங்­கா­லத் திட்­டம் கவ­னம் செலுத்­தும்.

குறிப்­பாக, வரு­மான அடிப்

படை­யில் கீழ்­மட்­டத்­தில் இருக்­கும் 40 விழுக்­காட்­டி­ன­ரின் நலன் கருதி அவர்­க­ளுக்கு ஆத­ர­வுக்­க­ரம் வழங்­கும் நோக்­கு­டன் திட்­டம் செயல் படுத்­தப்­படும்.

புதிய திட்­டத்­தின்­கீழ் மாநி­லங்­கள், வட்­டா­ரங்­கள் இடை­யி­லான மேம்­பாட்டு இடை­வெ­ளி­களை குறைப்­ப­தில் தீவி­ரம் காட்­டப்­படும்.

திட்­டத்தை நிறை­வேற்ற

மின்­னி­லக்க முறை, உயர் தொழில்­நுட்­பம் போன்­றவை பயன்­ப­டுத்­தப்­படும்.

ஐந்­தாண்­டுத் திட்­டத்­தின்­கீழ் சாபா, சர­வாக் ஆகிய மாநி­லங் ­க­ளின் சமூ­கப் பொரு­ளி­யல் மேம்­பாட்­டுத் திட்­டத்­தில் கூடு­தல் கவ­னம் செலுத்­தப்­படும் என்று பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

அடுத்த ஐந்து ஆண்­டு­களில் போக்­கு­வ­ரத்து, தள­வா­டம் ஆகி­ய­வற்­றுக்­கான உள்­கட்­ட­மைப்­புக்­கும் முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­படும்.

நீடித்த நிலைத்­தன்­மைக்கு முன்­னு­ரிமை கொடுத்து கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைத்து சுத்­த­மான, மீள்­தி­றன்­மிக்க மேம்­பாடு ஆகி­ய­வற்­றில் கவ­னம் செலுத்­தப்­படும்.

இவ்­வாண்­டி­லி­ருந்து 2025ஆம் ஆண்டு வரை ஒவ்­வோர் ஆண்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யின் வளர்ச்சி விகி­தத்தை 4.5 விழுக்­காட்­டி­லி­ருந்து 5.5 விழுக்­காடு வரை உயர்த்த மலே­சி­யத் திட்­டத்­தின்­கீழ் இலக்கு வகுக்­கப்­பட்டு உள்­ளது.

அது­மட்­டு­மல்­லாது, 2025ஆம் ஆண்­டுக்­குள் மலே­சி­யக் குடும்­பங்­க­ளின் சரா­சரி மாத வரு­மா­னத்தை 10,000 ரிங்­கிட்­டாக உயர்த்த திரு இஸ்­மா­யில் திட்­ட­மிட்­டுள்­ளார்.

தீப­கற்ப மலே­சி­யா­விற்­கும் சாபா மாநி­லத்­திற்­கும் இடைப்­பட்ட தனி நபர் மொத்த உள்­நாட்டு வரு­வாய் ஏற்­றத்­தாழ்வை 2025ஆம் ஆண்டு வாக்­கில் 1.0லிருந்து 2.5 ஆக­வும் தீப­கற்ப மலே­சி­யா­விற்­கும் சரா­வாக் மாநி­லத்­திற்­கும் இடைப்­பட்ட இந்த ஏற்­றத்­தாழ்வை 1.0லிருந்து 1.2 ஆகக் குறைக்­க­வும் இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!