புதிய முயற்சியில் இந்தோனீசியா

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் நடை­பெ­ற­வுள்ள விளை­யாட்­டுப் போட்­டி­யின் திறப்பு விழா­வைக் காண 10,000 பேர் வரை வருகை தருவர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஒரு கட்­டத்­தில் இந்­தோ­னீ­சி­யா­வில் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழல் மிக மோச­மாக இருந்­தது. அதற்­குப் பிறகு அந்­நாட்­டில் நடை­பெ­ற­வுள்ள முதல் விளை­யாட்டு நிகழ்ச்சி இது. கொவிட்-19 கிரு­மிப் பர­வ­ல் சமுதாயத்தில் இருந்தபடி இயல்பு வாழ்க்­கையை வாழ்­வ­தற்­கான சோதனை நட­வ­டிக்­கை­யாக இம்­மு­யற்சி அமை­ய­வுள்­ளது. இந்­தோ­னீ­சி­யா­வின் தேசிய விளை­யாட்டு வார­மான 'பிஓ­என்' என்­ற­ழைக்­கப்­படும் இந்­நி­கழ்ச்சி, ஜெய­புரா நக­ரில் இருக்­கும் புதுப்­பிக்­கப்­பட்ட விளை­யாட்­ட­ரங்­கில் நடை­பெ­று­வ­தாக அந்­நாட்­டின் உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது.

நிகழ்ச்­சி­யைக் காண வரு­வதற்கு முன் பார்­வை­யா­ளர்­கள் கொவிட்-19 பரி­சோ­த­னை­ மேற்­கொண்­டி­ருக்­க­வேண்­டும், முகக் கவ­சங்­களை அணி­யவேண்­டும், பாது­காப்பு தூர இடை­வெ­ளி­யை­யைக் கடை­ப்பி­டிக்­க­வேண்­டும்.

தென்­கி­ழக்­கா­சி­யா­வின் ஆகப் பெரிய பொரு­ளி­ய­லான இந்­தோ­னீ­சி­யா­வில் படிப்­ப­டி­யாக இயல்பு வாழ்க்கை திரும்­பு­கிறது. அந்­நாட்டில் கொவிட்-19 சம்­ப­வங்­கள், மர­ணங்­கள் ஆகி­ய­வற்­றின் எண்­ணிக்கை குறைந்து வரு­கின்­றன. சில வாரங்­க­ளுக்கு முன்போ நில­வரம் முற்றிலும் வேறு.

அப்­போது உல­க­ள­வில் இந்­தோ­னீ­சி­யா­வில்­தான் ஆக அதிக எண்­ணிக்­கை­யில் கொவிட்-19 சம்­ப­வங்­களும் மர­ணங்­களும் இடம்­பெற்­றன.

பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வது, சுகா­தார வழி­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது, தடுப்­பூசி போடு­வது ஆகிய நட­வ­டிக்­கை­களை எடுத்து கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தும் முயற்­சி­யில் இந்­தோ­னீசிய அர­சாங்­கம் இறங்­கி­யுள்­ளது. அதே நேரத்­தில் அதி­க­மா­னோ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­ப­டா­மல் அர­சாங்­கம் பார்த்­துக்­கொள்­கிறது.

கடந்த ஜூலை மாதத்­தின் கடைசி பகு­தி­யில் தின­மும் கிருமித்­தொற்றுக்கு ஆளான 2,000க்கும் அதி­க­மா­னோர் மர­ண­ம­டைந்­த­னர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று இந்த எண்­ணிக்கை 87ஆகக் குறைந்­தது. புதி­தாக 1,624 பேருக்கு மட்­டுமே கிரு­மித்­தொற்று ஏற்­பட்டது.

ஜூலை மாதத்­தில் இந்­தோ­னீசியா­வின் சுகா­தா­ரத் துறை பெரும் நெருக்­கு­த­லுக்­கு உள்­ளா­னது. இப்­போது இயல்­பு­நி­லை­யைப் படிப்­ப­டி­யா­கக் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சி­யில் இந்தோனீசியா ஈடுபட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!