மீண்டும் சீண்டிய சீனா; தைவான் பதில் நடவடிக்கை; பதற்றம்

தைப்பே: சீனா, தான் இருப்­பதை தைவா­னுக்கு நினை­வூட்­டும்­ வி­த மாக அடிக்­கடி போர் விமா­னங்­களை அனுப்பி வரு­கிறது.

சனிக்­கி­ழமை அன்று தைவான் வான்­வெ­ளி­யில் 39 சீன கடற்­படை விமா­னங்­கள் ஊடு­ரு­விச் சென்­றன. ஆத்­தி­ர­ம­டைந்த தைவான், பதி­ல­டிக்­குத் தயா­ரா­னது. இத­னால் சீனா­வுக்­கும் தைவா­னுக்­கும் இடையே பதற்­றம் அதி­க­ரித்­தது.

தைவா­னில் ஜன­நா­யக முறை­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சாங்­கம் ஆட்சி நடத்தி வரு­கிறது. ஆனால் தன்­னு­டைய நாட்­டின் ஒரு பகு­தி­தான் தைவான் என்று சீனா தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கிறது.

இந்­நி­லை­யில் கடந்த ஓராண்டு கால­மாக தன்­னு­டைய வான்வெ­ளி­ யில் சீன விமா­னங்­கள் அத்­து­மீ­று­வது அதி­க­ரித்­துள்­ள­தாக தைவான் தற்­காப்பு அமைச்சின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

சீனா­வின் 39 விமா­னங்­கள் நுழைந்­த­தும் அதற்கு எதி­ராக போர் விமா­னங்­கள் இரண்டு அலை­ களாக பிரித்து அனுப்பி வைக்­கப்­பட்­ட­தாகவும் சீன விமா­னங்­களை எச்­ச­ரிக்­கும் வகை­யில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக ஏவு­க­ணைத் தற்­காப்பு சாத­னங்­க­ளை­யும் தைவான் ஆயத்­தப் ­ப­டுத்­தி­யிருந்தது.

சனிக்­கி­ழமை அன்று பக­லில் இரு­பது சீன விமா­னங்­கள் அத்­து­மீறி நுழைந்­த­தா­க­வும் பின்­னர் அன்று இரவு 19 சீன விமா­னங்­கள் ஊடு­ரு­வி­ய­தா­க­வும் தைவான் தற்­காப்பு அமைச்சு மேலும் கூறி­யது.

பெரும்­பா­லான சீன விமா­னங்­கள் ஜே-16, எஸ்யு-30 ரக போர் விமா­னங்­க­ளா­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!