ஜப்பானில் 100வது பிரதமர் பதவியேற்பு

தோக்­கியோ: ஜப்­பா­னில் 100வது பிர­த­ம­ராக நேற்று பிற்­ப­கல் ஃபுமியோ கிஷிடா பொறுப்பு ஏற்­றுக்கொண்­டார். கடந்த வாரம் லிப­ரல் ஜன­நா­யகக் கட்­சி­யில் நடந்த போட்­டி­யில் தலை­வர் பத­வியை 64 வயது கிஷிடா கைப்­பற்­றி­னார்.

புதிய பிர­த­ம­ராக பொறுப்பு ஏற்­றுள்ள அவ­ருக்கு கொள்­ளை­நோய்க்­குப் பிந்­திய பொரு­ளி­யல் மீட்சி, வட­கொ­ரி­யா­வின் மிரட்­டல் உட்­பட பல பிரச்­சி­னை­கள் காத்­தி­ருக்கின்­றன.

தோக்­கி­யோ­வில் வெற்­றி­க­ர­மாக ஒலிம்­பிக் விளை­யாட்டுகள் நடத்­தப் பட்­டா­லும் அத­னால் அவ­ரது கட்­சி­யின் ெசல்­வாக்கு அதி­க­ரிக்­க­வில்லை. தேர்­த­லுக்­குள் கட்­சி­யின் செல்­வாக்கை தூக்கி நிறுத்த வேண்­டி­ய­தும் அவ­ருக்கு கட்­டா­யமா கிறது. திரு சுகா பதவி வில­கி­ய­தைத் தொடர்ந்து லிப­ரல் ஜன­நா­ய­கக் கட்­சித் தலை­வ­ராக ஃபுமியோ கிஷிடா தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளார்.

இந்த நிலை­யில் தேர்­தல் அறி­விப்பை அவர் வெளிட்டுள்ளார்.

அதன்படி இம்மாதம் 31ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

படம்: கைதட்டலுக்குத் தலை வணங்கும் ஃபுமியோ கிஷிடா. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!