மேன்சிட்டியைத் தகர்த்த சாலாவின் சாகசம்

இங்­கி­லாந்து பிரி­மி­யர் லீக் காற்­பந்­துப் போட்டி ஒன்­றில் நேற்று முன்­தி­னம் லிவர்­பூ­லும் மான்­செஸ்­டர் சிட்­டி­யும் மோதின.

பர­ப­ரப்­பான இந்த ஆட்­டத்­தின் முதல் 15 நிமி­டங்­கள் சிட்டி குழுவை லிவர்­பூல் திண­ற­டித்த போதி­லும் அதன்பின் முற்­பாதி ஆட்­டம் முழு­ வ­தும் மான்­செஸ்­டர் சிட்­டி­யின் தாக்­கு­தலை எதிர்­கொள்­வ­தி­லேயே லிவர்பூல் ஈடுபட்டது.

ஆனால், இரண்­டாம் பாதி­யில் லிவர்­பூல் அணி, சிட்டி குழு­வுக்கு சிம்­ம­சொப்­ப­ன­மாக விளங்­கி­யது. ஆட்­டம் தொடங்கி கிட்­டத்­தட்ட ஒரு மணி நேரத்­தில் லிவர்­பூ­லின் சாடியோ மானே சக ஆட்­டக்­கா­ரர் முக­மது சாலா கொடுத்த பந்தை சிட்டி கோல் வலைக்­குள் போட்­டார். அவ­ரு­டைய இந்த கோலால் சிட்டி திக்­கு­முக்­கா­டி­யது.

இதற்குப் பதில் சொல்­லும் வகையில் மான்­செஸ்­டர் சிட்­டி­யின் ஃபில் ஃபோடன் ஒரு கோல் போட்டு ஆட்­டத்தை சம­நிலை செய்­தார். ஆனால், இதற்­குப் பின் நடந்­த­தைத்­தான் சிட்டி சற்­றும் எதிர்­பார்க்கவில்லை.

மைதா­னத்­தில் தனது பகு­தி­யில் பந்­தைப் பெற்­றுக்­கொண்ட லிவர்­பூ­லின் சாலா சிட்டி தற்­காப்பு அரணை உண்டு இல்லை என்று செய்து மிக­வும் குறு­க­லான பாதை­யில் பந்தை செலுத்தி லிவர்­பூ­லின் இரண்­டா­வது கோலைப் போட்டு சிட்டி குழுவை மீண்­டும் திகைக்க வைத்­தார்.

இந்த கோலை குறிப்பிட்டுப் பேசிய லிவர்­பூல் நிர்­வாகி யகர்ன் கிளோப், "உல­கின் மிகச்சிறந்த ஆட்­டக்­கா­ரர்­க­ளால் மட்­டுமே இது­போன்ற கோல்­க­ளைப் போட முடி­யும். 50, 60 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் இந்த ஆட்­டத்தை நினை­வு­கூரு வோர், இந்த கோலைப் பற்றி நிச்­ச­யம் பேசு­வர்," என்று சாலா­வின் அற்­புதக் கோலுக்குப் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

பின்­னர் எப்­ப­டியோ ஆட்­டம் முடிய ஒன்­பது நிமி­டங்­கள் இருக்­கும் நிலை­யில் சிட்­டி­யின் கெவின் டி பிரய்ன உதைத்த பந்து லிவர்­பூல் ஆட்­டக்­கா­ர­ரின் மேல்­பட்டு பாதை மாறி லிவர்­பூல் கோல்­காப்­பா­ள­ரின் கைகளில் அகப்­ப­டா­மல் வலைக்­குள் புகுந்து ஆட்­டத்தை 2-2 என்ற சம­நி­லை­யில் முடித் ­தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!