விக்டோரியாவில் மீண்டும் தொற்று அதிகரிப்பு

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் விக்­டோ­ரியா மாநி­லத்­தில் கொவிட்-19 புதிய அன்­றா­டத் தொற்று தேசிய அள­வில் சாதனை அள­வாக 1,763 என­வும் நான்கு தொற்று மர­ணங்­களும் பதி­வா­கி­யுள்­ளன. அம்­மா­நி­லத்­தில் கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ராக தடுப்­பூசி போடும் பணி முழு வீச்­சில் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது. இது­வரை அம்­மா­நி­லத்­தின் மக்­கள் தொகை­யில் 53 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

தடுப்­பூசி போடப்­பட்­டோர் விகி­தம் 70ஐ எட்­டி­ய­தும் முடக்­க­நிலையை நீக்­கி­விட்டு முழு­மை­யா­கத் திறந்துவிட அம்­மா­நி­லம் திட்­ட­மிட்­டி­ருந்த நிலை­யில் அங்கு அன்­றா­டத் தொற்­றுப் பதிவு அதி­க­ரித்­துள்­ளது. இதற்­கி­டை­யில், ஆஸ்­தி­ரே­லியா அதன் தடுப்­பூசி விகி­தத்தை அதி­க­ரிக்­கும் முயற்­சி­யில் தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளது. நேற்­றைய நில­வ­ரப்­படி, வயது வந்­த­வர்­களில் 80% முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில், அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை ஆக அதி­க­மா­கப் பதி­வா­கும் மாநி­ல­மாக விக்­டோ­ரியா உள்­ளது. மொத்­தம் 1,763 புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் சனிக்­கி­ழ­மை­யன்று பதி­வா­கின.

இந்­நி­லை­யில் அமெ­ரிக்க மருந்­துத் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான 'மெர்க் அண்ட் கோ' தற்­போது தயா­ரித்து, பரி­சோ­தித்து வரும் கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ரான மாத்­தி­ரை­களை ஆஸ்­தி­ரே­லியா வாங்­க­வுள்­ளது.

சோதனை முயற்­சி­யாக முத­லில் 300,000 மாத்­தி­ரை­கள் வாங்­கப்­படும் என்று அந்­நாட்­டுப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் நேற்­றுக் கூறி­னார்.

மோல்­னு­பி­ர­வீர் என்று பெயரிடப்பட்ட அந்த மாத்திரை கொவிட்-19க்கு முதல் வாய்­வழி கிரு­மித் தடுப்பு மருந்­தாக இருக்­கும். இது கடு­மை­யான பாதிப்­பு­க­ளைக் குறைக்­க­லாம் என நிபு­ணர்­கள் கரு­து­கின்­ற­னர்.

இந்த மாத்­தி­ரை­களை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை என 5 நாள்­க­ளுக்கு உட்­கொள்­ளப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது என்று திரு மோரி­சன் கூறி­னார்.

அந்­நாட்­டின் மருந்­துக் கட்­டுப்­பாட்டு அமைப்­பி­னால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டால் அவை அடுத்த ஆண்­டுத் தொடக்­கத்­தில் மக்­க­ளுக்­குக் கிடைக்­கும். தென்­கொ­ரியா, தாய்­லாந்து, தைவான், மலே­சியா ஆகிய நாடு­கள் இந்த மருந்தை வாங்க பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்­றன. பிலிப்­பீன்ஸ் இம்­மாத்­தி­ரையை பரி­சோ­தித்து வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!