தடுப்பூசி பற்றிய தவறான தகவலால் இளம் வயதினரிடையே பதற்றம்

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டம் குறித்து தவ­றான தக­வலை பரப்­பும் நோக்­கில் இணை­யம் மூலம் ஏரா­ள­மான காணொ­ளி­கள் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன. அத­னால் தடுப்­பூசி போட்­டுக் கொள்­வ­தற்கு இளைய வய­தி­னர் அஞ்­சு­கின்­ற­னர்.

அவர்­க­ளுக்கு தடுப்­பூசி குறித்து இந்தக் காணொ­ளி­கள் தவ­றான தக­வல்­களை அளிப்­ப­தாக மலே­சிய சுகா­தாரத்துறை துணை அமைச்­சர் கூறி­யுள்­ளார். இது­போன்று உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வல்­களைப் பரப்­பும் தனிப்­பட்­ட­வர்­கள் மீது கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அவர் கூறி­னார்.

மலே­சி­யா­வில் இது­வரை 12 வய­தி­லி­ருந்து 17 வய­துள்ள பருவ வய­தி­னர் மூன்று மில்­லி­யன் பேருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

அந்­தக் காணொ­ளி­யில், தடுப்­பூசி நிலை­யத்­திற்கு வெளியே ஒரு பருவ வய­தி­னர் மயங்கி விழு­வ­தைப்­போன்ற காட்­சி­கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. தடுப்­பூசி நிலை­யத்­திற்கு சிறு­வர்­க­ளின் பெற்­றோர் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை என்­றும் அத்­து­டன் ஊசி குத்­து­ப­வர், மருந்து நிரப்­பப்­ப­டாத ஊசி­யைக் குத்­திய­தா­க­வும் அந்த காணொளி தவ­றான தக­வல்­க­ளைப் பரப்­பு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அந்­தக் காணொ­ளி­யில் கூறப்­ப­டு­வதை சுகா­தாரத்­துறை துணை அமைச்­சர் நூர் அஸ்மி கஸாலி சென்ற வாரம் மறுத்­தி­ருந்­தார். அத்­து­டன் இது­போன்ற செயல்­களில் ஈடு­ப­டு­வோர் மீது சட்­டம் பாயும் என்று எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!