ஜப்பானின் தற்காப்பை பலப்படுத்த அதிக நிதி

தோக்­கியோ: ஜப்­பா­னின் தற்­காப்­பைப் பலப்­ப­டுத்த அதிக நிதி ஒதுக்­கப்­படும் என ஆளும் லிப­ரல் ஜன­நா­யகக் கட்­சி­யின் வரைவு தேர்­தல் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

வரும் 31ஆம் தேதி நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலை முன்­னிட்டு அக்­கட்சி வெளி­யி­ட­வுள்ள தேர்­தல் அறிக்­கை­யின் வரைவு கொள்கை திட்­டத்­தில் இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாடா­ளு­மன்­றத்­தில் தனது முதல் கொள்கை உரையை வழங்­கிய அதன் புதிய பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா, அதி­கப்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்புச் சூழ­லில் ஜப்­பா­னை­யும் அதன் மக்­க­ளை­யும் பாது­காக்க உறு­தி­பூண்­டுள்­ள­தாக சொன்­னார்.

சீனா­வின் அதி வேக ராணுவ கட்­ட­மைப்­பும் வட­கொ­ரி­யா­வின் அணு­வா­யுத, ஏவு­கணைத் திட்­டங்­களும் ஜப்­பா­னின் பாது­காப்­பைப் பலப்­ப­டுத்த தூண்­டி­யுள்­ளது.

கடந்த பத்­தாண்­டு­க­ளில் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் சுமார் ஒரு விழுக்காடாக இருந்த பாது­காப்­பிற்­கான வர­வு­செ­லவு திட்­டத்தை 2 விழுக்­காட்­டிற்­கும் மேல் அதி­க­ரிக்க திட்டமிட்டுள்­ள­தாக கூறப்பட்டுள்ளதாக ராய்ட்­டர்ஸ் தெரிவிக்கிறது.

தாக்க வரும் ஏவு­க­ணை­களை இடை­ம­றிக்­கும் திறன் கொண்ட ஏவு­கணைகளை வாங்­கு­வது உட்­பட ஜப்­பா­னின் பாது­காப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் அடங்கும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

தடு­ப்பூசி போட்­டுக்­கொள்ள விரும்­பும் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் நவம்­பர் மாத தொடக்­கத்­திற்­குள் தடுப் ­பூசி கிடைக்க ஏற்­பாடு செய்­யப்­படும் என்­றும் அந்த அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

மருத்­துவ வளங்­க­ளைப் பாது­காக்க தேவையான அதி­கா­ரங்­களை அர­சாங்­கத்­திற்கு வழங்க அழுத்­தம் கொடுக்­கப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!