தைவான் அதிபர்: ராணுவ மோதலை விரும்பவில்லை

தைப்பே: தைவான் ராணுவ மோதலை விரும்­ப­வில்லை என்று கூறி­யி­ருக்கும் அதன் அதி­பர் சாய் இங்வென், அதே­ச­ம­யம் அதன் சுதந்­தி­ரத்­தைப் பாது­காக்க எதை வேண்­டு­மா­னா­லும் செய்­வேன் என்­றும் கூறி­யுள்­ளார். சீனா­

வு­ட­னான பதற்­றம் அதி­க­ரித்­துள்ள நிலை­யில் அவர் இவ்­வாறு கூறி­உள்­ளார்.

அக்­டோ­பர் 1ஆம் தேதிக்­குப் பிற­கு நான்கு நாட்­க­ளுக்­குள் 150 சீன விமா­னப்­படை விமா­னங்­கள் தைவா­னின் வான் பாது­காப்பு மண்­ட­லத்­திற்­குள் பறந்­த­தாக தைவான் கூறி­யது.

கடந்த ஓராண்­டுக்­கும் மேலாக சீனா­வின் இது­போன்ற அத்­து­

மீ­றிய நட­வ­டிக்­கை­கள் குறித்து தைவான் புகார் கூறி­வ­ரு­கிறது.

தைவா­னின் ஆயு­தப் படையை வலு­வி­ழக்க செய்­ய­வும் பதி­லடி கொடுக்­கும் படைத் திற­னைச் சோதிக்­கும் நோக்­கி­லும் சீனா இது­போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தாக தைவான் கரு­து­கிறது.

தைவானை தனது ஒரு பகுதி என்று கூறி வரும் சீனா, அத­னைத் தனது கட்­டுப்­பாட்­டிற்­குள் கொண்டு வர முயன்று வரு­கிறது.

இந்­நி­லை­யில், நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய தைவான் அதி­பர் சாய் இங்வென், "தைவான் ராணுவ மோதலை விரும்­ப­வில்லை. அது அண்டை நாடு­க­ளு­டன் அமை­தி­யான, நிலை­யான உற­வில் நம்­பிக்கை கொண்­டுள்­ளது.

"ஆனால் தனது சுதந்­தி­ரம், ஜன­நா­ய­கத்­தைப் பாது­காக்க தைவான் எதை வேண்­டு­மா­னா­லும் செய்­யும்," என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!