‘தைவானை ஒன்றிணைப்போம்’

பெய்­ஜிங்: சீனா­வு­டன் தைவானை 'மீண்­டும் ஒன்­றி­ணைப்­போம்' என்று சீன அதி­பர் ஸி ஸின்­பிங் உறுதி கூறி­யுள்­ளார்.

இருப்­பி­னும் சீனா­வுக்­கும் தைவா­னுக்­கும் இடை­யில் கடந்த ஒரு வார­கா­ல­மாக மோச­மை­டைந்­துள்ள பதற்­றத்­திற்கு மத்­தி­யில், ராணுவ பலத்தைப் பயன்­ப­டுத்­து­வ­தைப் பற்றி அவர் நேர­டி­யா­கக் குறிப்­பி­ட­வில்லை.

இது­கு­றித்து சீனா­வின் கிரேட் ஹால்­லில் நடந்த நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய சீன அதி­பர் ஸி ஸின்­பிங், "சீனா அமை­தி­யான முறை­யில் தைவா­னு­டன் ஒன்­றி­ணைய விரும்­பு­கிறது.

"தைவா­னின் சுதந்­திர பிரி

வினை­வா­தம், சீனா­வு­டன் மீண்­டும் ஒன்­றி­ணைப்­ப­தற்கு மிகப்­பெ­ரிய தடை­யாக உள்­ளது.

"சீனா தனது இறை­யாண்­மை­யை­யும் ஒற்­று­மை­யை­யும் பாது­காக்­கும். சீனாவை முழு­மை­யாக ஒன்­றி­ணைக்­கும் வர­லாற்று பணி நிறை­வேற்­றப்­பட வேண்­டும், நிச்­ச­ய­மாக நிறை­வேற்­றப்­படும்," என்று மென்­மை­யாக பேசி­னார்.

சில மாதங்­க­ளுக்கு முன்பு தைவா­னைப் பற்றி பேசும்­போது, எந்த முயற்­சி­யை­யும் அடித்து நொறுக்­கு­வேன் என்­றும் 2019ல் தைவா­னைக் கைப்­பற்ற தேவைப்­பட்­டால் படை­ப­லத்­தைப் பயன்­ப­டுத்த தயங்க மாட்­டேன் என்று மிரட்­டும் தொனி­யில் பேசி­ய­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

சீன அதி­ப­ரின் அண்­மைய பேச்­சுக்­குப் பதி­ல­ளித்த தைவான், வற்­பு­றுத்­து­வ­தைக் கைவி­டு­மா­றும் தைவா­னின் எதிர்­கா­லத்தை அந்­நாட்டு மக்­கள் மட்­டுமே முடிவு செய்­வார்­கள் என்­றும் மீண்­டும் வலி­யு­றுத்­தி­யது.

மேலும் சீனா­வின் 'ஒரு நாடு, இரண்டு ஆட்சி' முறையை தைவான் மக்­கள் விரும்­ப­வில்லை என்­பது தெளி­வாக உள்­ள­தா­க­வும் தைவான் கூறி­யது.

தனது சுதந்­தி­ரத்­தைக் காத்­துக் கொள்ள தைவான் வேண்­டிய அனைத்­தை­யும் செய்­யும் என்று தைவான் அதி­பர் நேற்று முன்­

தி­னம் கூறி­யி­ருந்­தார்.

அண்­மைய ஆண்­டு­களில் தைவா­னைச் சுற்றி தனது போர்ப் பயிற்­சி­யை­யும் சீனா அதி­க­ரித்­துள்­ளது.

சீனா­வில் கடந்த 1949ல் நடந்த உள்­நாட்­டுப் போருக்கு பிறகு தைவான் உரு­வா­னது. என்­றா­லும் தைவான், சீனா­வின் ஒருங்­கி­ணைந்த பகுதி என சீன அரசு கூறி வரு­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!