பேச்சுவார்த்தை: வர்த்தக வரிகளை நீக்க அமெரிக்காவை வலியுறுத்திய சீனா

வாஷிங்­டன்: அமெ­ரிக்கா, சீனா இரு நாடு­க­ளின் வர்த்­தக அதி­கா­ரி­க­ளுக்­கி­டை­யி­லான பேச்­சு­வார்த்­தை­யின்­போது வரி­களை நீக்­கு­மாறு அமெ­ரிக்­கா­வி­டம் வலி­யு­றுத்­தி­ய­தாக சீனா தெரி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்க வர்த்­த­கப் பிர­தி­நிதி கேத்­ரீன் டாய், சீனா­வின் துணைப் பிர­த­மர் லியு ஆகிய இரு­வ­ரும் மெய்­நி­கர் பேச்­சு­வார்த்­தை­யில் ஈடு­பட்­ட­னர்.

"வரி, தடை­களை ரத்து செய்­வது குறித்து சீன தரப்பு பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­து­டன், பொரு­ளா­தார மேம்­பாடு குறித்­தும் தொழில்­துறை கொள்­கை­கள் குறித்த தனது நிலைப்­பாட்­டை­யும் சீனா தெளி­வு­ப­டுத்­தி­யது," என்று சீனா­வின் ‌‌சின்­ஹுவா செய்தி கூறு­கிறது.

இரு தரப்­பி­ன­ரும் தங்­கள் முக்­கிய கவ­லை­களை வெளிப்­ப­டுத்­தி­ய­தா­க­வும் நியா­ய­மான கவ­லை­களை ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் ஆலோ­சனை மூலம் தீர்க்க ஒப்­புக்­கொண்­ட­தா­க­வும் சீன ஊட­கம் கூறு­கி

றது.

பெய்­ஜிங்­கின் வர்த்­தக, மானிய நடை­மு­றை­கள் குறித்த அமெ­ரிக்­கா­வின் கவ­லை­க­ளுக்கு இது­போன்ற இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை மூலம் தீர்வு காண முடி­யுமா என்­பதை அறிந்­து­கொள்­ளும் நோக்கில் அமெ­ரிக்கா இதை அணு­கு­வ­தாக அமெ­ரிக்க அதி­காரி ஒரு­வர் சொன்­

னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!