பாகிஸ்தானின் அணுகுண்டு விஞ்ஞானி காலமானார்

இஸ்­லா­மா­பாத்: பாகிஸ்­தானை அணு­வா­யுத நாடாக மாற்­றிய விஞ்­ஞானி திரு அப்­துல் காதர் கான் (படம்) மர­ண­ம­டைந்­து­விட்­ட­தாக பாகிஸ்­தா­னிய அதி­கா­ரி­கள் நேற்று அறி­வித்­த­னர்.

அவ­ருக்கு 85 வயது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக பாகிஸ்­தா­னிய ஊட­கம் தெரி­வித்­தது.

கல்­லீ­ர­லில் ஏற்­பட்ட பிரச்­சினை கார­ண­மாக அவர் மாண்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

தேசிய வீர­ராக திரு கானை பாகிஸ்­தான் கரு­து­கிறது. ஆனால் சர்­வா­தி­கா­ரி­க­ளால் ஆளப்­படும் நாடு­க­ளுக்கு அணு­வா­யு­தங்­க­ளைத் தயார் செய்­வ­தற்­கான தொழில்­நுட்­பத்தை அனுப்­பி­வைத்த ஆபத்­தா­ன­

வ­ராக திரு கானை மேற்­கத்­திய நாடு­கள் பார்க்­கின்­றன.

திரு கானின் மர­ணம் தம்மை ஆழ்ந்த சோகத்­தில் ஆழ்த்தி இருப்­ப­தாக பாகிஸ்­தா­னிய அதி­பர் அரிஃப் ஆல்வி தெரி­வித்­தார். ஈரான், லிபியா, வட­கொ­ரியா ஆகிய நாடு­க­ளு­டன் அணு­வா­யு­தத் தொழில்­நுட்­பத்­தைப் பகிர்ந்­து­கொண்­டதை திரு கான் ஒப்­புக்­கொண்­டதை அடுத்து, 2004ஆம் ஆண்­டில் அவர் தலை­ந­கர் இஸ்­லா­மா­பாத்­தில் வீட்­டுக் காவ­லில் வைக்­கப்­பட்­டார்.

2006ஆம் ஆண்­டில் அவ­ருக்­குப் புற்­று­நோய் இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது. ஆனால் அறுவை சிகிச்­சைக்­குப் பின் அவர் குண­ம் அடைந்­தார். 2009ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதத்­தில் அவ­ரது வீட்­டுக் காவல் முடி­வுக்கு வந்­தது.

இருப்­பி­னும் அவ­ருக்­குப் பல கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!