சீனாவை விடாது துரத்தும் மழை; 1.75 மில்லியன் மக்கள் பாதிப்பு

பெய்­ஜிங்: சீனா­வின் வடக்கு ஷாங்ஸி மாநி­லத்­தில் ஏற்­பட்ட கடும் வெள்­ளத்­தால் 1.75 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக உள்­ளூர் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

பொது­வாக வறண்ட பகு­தி­யாக காணப்­படும் இப்­ப­கு­தி­யில் மூன்று மாதத்­தில் பெய்ய வேண்­டிய மழை ஒரே வாரத்­தில் கொட்­டித் தீர்த்­து­விட்­டது.

சீனா­வில் அதிக நிலக்­கரி உற்­பத்தி செய்­யும் பகு­தி­களில் ஒன்­றான அங்கு ஏற்­பட்ட வெள்­ளப் பெருக்கு கார­ண­மாக கிட்டத்தட்ட 60 நிலக்­கரி சுரங்­கங்­கள் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டன.

ஆனால் தற்­போது நான்கு சுரங்­கங்­க­ளைத் தவிர மற்ற அனைத்­தும் வழக்­க­மாக செயல்­ப­டத் தொடங்­கி­யுள்­ள­தாக உள்­ளூர் அவ­ச­ர­நிலை நிர்­வாக அதி­காரி வாங் கிருய் கூறி­னார்.

ஷாங்ஸி மாநி­லத்­தில் பெய்த மழை, வெள்­ளம் கார­ண­மாக ஏறக் குறைய 19,000 கட்­ட­டங்­கள் சேத­ம­டைந்­து­விட்­ட­தா­க­வும் மேலும் 18,000 கட்­ட­டங்­கள் மோச­மாக சேத­ம­டைந்­து­விட்­ட­தா­க­வும் அவர் சொன்­னார்.

"இத­னால் கிட்டத்தட்ட 1.75 மில்­லி­யன் மக்­கள் பாதிக்­கப்­பட்­டு

உள்­ளனர். 120,000 பேர் பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­டுள்­ள­னர்.

"இவர்­களைத் தவிர 15 பேர் மாண்­டு­விட்­டனர். மூவரைக் காணவில்லை," என்­றும் அவர் சொன்­னார்.

நீடித்த மழை, புயல், மீட்­புப் பணி­க­ளுக்கு இடை­யூ­றாக உள்­ள­தாக சீனா­வின் வானிலை ஆய்வு மையம் கூறி­யுள்­ளது.

கிட்டத்தட்ட 190,000 ஹெக்­டர் நிலப்­ப­ரப்­பில் பயி­ரி­டப்­பட்­டி­ருந்த பயிர்­கள் நாச­ம­டைந்­து­விட்­ட­தா­க­வும் உள்­ளூர் ஊட­கங்­கள் கூறு­கின்­றன.

ஷாங்ஸி­யில் அக்­டோ­பர் 2 முதல் 7ஆம் தேதி வரை 119.5 மி.மீ. மழை பெய்­த­­தாக வானிலை ஆய்வு மையம் கூறி­யது.

நிலக்­கரி தட்­டுப்­பாடு, மின்­சார, நிலக்­கரி விலை உயர்வு, மின்­வெட்­டால் பாதிக்­கப்­பட்­டுள்ள சீனா­வில், இந்த மழை அதை மேலும் மோச­மாக்­கக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

இவ்­வாண்டு சீனா முழு­வ­தும் பல பகு­தி­களில் வர­லாறு காணாத மழை கொட்­டித் தீர்த்து மோச­மான பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யது.

சென்ற ஜூலை மாதம் ஹெனான் மாநி­லத்­தில் பெய்த அதி­தீ­விர கன­ம­ழைக்கு ஏறக்குறைய 300க்கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­த­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!