பாதுகாவலரின் அனுமதி பெற்று, அத்தைக்குப் பிரியாவிடை

விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதி பெற்று, உள்ளே சென்று, சிறுமி ஒருத்தி தன் அத்தைக்குப் பிரியாவிடை அளிக்கும் காணொளி இணையத்தைக் கலக்கி வருகிறது.


பாதுகாப்பு அதிகாரியை நோக்கி மெல்ல நடந்து செல்லும் அச்சிறுமி, விமான நிலையத்தின் உள்ளே தன் அத்தை இருப்பதாகக் கைகாட்டி, அவரைச் சந்திக்க வேண்டும் என்று கூறுகிறாள்.


அந்த அதிகாரியும் தலையசைத்து ஒப்புதல் தர, விமான நிலையத்திற்குள் விரைகிறாள் அச்சிறுமி. அவள் வருவதைக் கண்ட அவள் அத்தையும் ஓடிவந்து அவளை வாரி அணைத்துக்கொள்கிறார்.


நெகிழ வைக்கும் இக்காணொளியை சமூக ஊடகங்களில் இதுவரை அறுநூறாயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு மகிழ்ந்துள்ளனர்.

Remote video URL


இக்காணொளி எங்கு பதிவுசெய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இது கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஹமத் அனைத்துலக விமான நிலையம் என்று டுவிட்டர்வாசிகள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!