நவம்பர் 20ல் மலாக்கா தேர்தல்

கோலா­லம்­பூர்: கிரு­மித்­தொற்று பர­வ­லுக்கு இைடயே மலாக்கா மாநி­லத்­தில் சட்­ட­மன்­றத் தேர்­தல் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த மாதம் 20ஆம் தேதி தேர்­தல் நடை­பெ­றும் என்று தேர்­தல் ஆணை­யம் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­தது.

"இரு­பது நாட்­கள் தேர்­தல் பிர­சா­ரம் நடை­பெ­றும். வேட்பு மனுத் தாக்­கல் நவம்­பர் 8ஆம் தேதி தொடங்­கும்," என்று தேர்­தல் ஆணை­யத்­தின் தலை­வர் அப்­துல் கனி சாலே தெரி­வித்­தார்.

இம்­மா­தம் 5ஆம் தேதி அம்னோ தலை­மை­யி­லான ஆட்சி கவிழ்ந்­த­தைத் தொடர்ந்து அம்மாநில சட்­ட­மன்­றம் கலைக்­கப்­பட்­டது.

பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்­பும் அம்னோ தலை­வர் அஹ­மட் ஸாஹிட் ஹமி­டி­யும் கொள்­ளை­ நோய் பர­வும் சூழ்­நி­லை­யில் தேர்­தல் நடத்­து­வதை விரும்­ப­வில்லை. கிருமித்­ தொற்­றி­லி­ருந்து மலே­சியா மீண்டு வரு­வ­தற்­கான அறி­கு­றி­கள் அண்­மை­யில்­தான் தென்­ப­டத் தொடங்­கி­யுள்­ளன.

கடந்த ஆண்டு செப்­டம்­ப­ரில் கடை­சி­யாக சாபா­வில் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடத்­தப்­பட்­டது. ஆனால் அதன் பிறகு கிரு­மித்­தொற்று கட்­டுக்கடங்­கா­மல் பர­வி­ய­தால் அர­சாங்­கம் திண­றி­யது. தேர்­தல் நடத்­தப்­பட்­டதை பலர் கடு­மை­யாக விமர்­சித்­த­னர்.

இந்­தச் சூழ்­நி­லை­யில் மலாக்கா தேர்­தல் நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

அண்­மைய நில­வ­ரப்­படி ஞாயிற்றுக்­கி­ழமை அன்று மலாக்­கா­வில் மட்­டும் 261 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தொற்­றுச் சம்­ ப­வங்­களும் தேசிய சரா­சரி எண்­ணிக்­கைக்கு ஈடாக இங்கு குறைந்து வரு­கிறது.

மலாக்­கா­வின் மக்­கள்­தொ­கை­யில் 68.6 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யாகத் தடுப்­பூசி போட்­டுள்­ள­னர். இந்த மாநி­லத்­தில் 28 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்க தேர்­தல் நடைெப­று­கிறது. சுமார் 400,000 பேர் வாக்­க­ளிக்­கத் தகுதி பெற்­றுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!