மியன்மார் ராணுவம் பணிகிறது; இம்மாத இறுதியில் 5,000 ஆர்ப்பாட்டக்காரர்களை விடுவிக்கிறது

மியன்மார் ராணுவம் பணிகிறது; இம்மாத இறுதியில் 5,000 ஆர்ப்பாட்டக்காரர்களை விடுவிக்கிறது

1 mins read
369a4ed0-b13a-4954-922a-1fd94616010e
-

யங்­கூன்: ஆசி­யான் கூட்­டத்­துக்கு அழைக்­கப்­ப­டா­த­தால் அதிர்ச்­சி­ய­டைந்­துள்ள மியன்­மார் ராணு­வம் 5,000க்கும் மேற்­பட்ட ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை விடு­விக்க முன்­வந்­துள்­ளது.

ஓய்வுபெற வேண்­டிய ராணுவத் தலை­வர் மின் அவுங் ஹிலைங், கடந்த பிப்­ர­வரி மாதம் ஜன­நா­யக ஆட்­சி­யைக் கவிழ்த்து ஆட்­சிக் கட்­டி­லில் அமர்ந்­தார்.

அப்­போது முதல் நாட்­டில் குழப்­பம் நீடித்து வரு­கிறது.

ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­களை ராணு­வம் கொன்று குவித்­துள்­ளதாகவும் எட்­டா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோைர சிறை­யில் அடைத்­துள்­ளதாகவும் உள்­ளூர் கண்­கா­ணிப்பு அமைப்­பு­கள் கூறு­கின்­றன.

இந்­நி­லை­யில் ஆசி­யான் தலை­வர்­க­ளின் புறக்­க­ணிப்பை சற்­றும் எதிர்­பாராத ராணு­வத் தலை­வர் மின், இம்­மாத இறு­தி­யில் 5,636 சிறைக் கைதி­கள் விடு­விக்­கப்படு வர் என்று அறி­வித்துள்ளார். ஆசி­யான் கூட்­டத்­துக்கு மியன்மார் தலை­வரை அழைக்க வேண்­டாம் என்று அந்த அமைப்பு முடிவு செய்­துள்ள நிலை­யில் திரு மின்­னின் அறி­விப்பு வெளி­யாகி உள்­ளது. யார் யார் விடு­விக்­கப்­படுவார்­கள் என்ற விவ­ரத்தை அவர் வெளி­யி­ட­வில்லை.

கடந்த ஜூன் மாதம் ராணுவ அர­சாங்­கத்தை விமர்­சித்த செய்தியாளர்­கள் உட்­பட 2,000 பேர் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் கடந்த மே 24ஆம் தேதி கைது செய்­யப்­பட்ட அமெ­ரிக்கச் செய்­தி­யா­ளரான டேனி ஃபென்ஸ்­டர் இன்­ன­மும் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

தொலைக்­காட்­சி­யில் உரையாற்­றிய திரு மின், ராணுவ அர­சாங்­கத்­தின் நட­வ­டிக்­கை­களை தற்­காத்­துப் பேசி­னார்.

நாட்­டின் ஜன­நா­ய­க­மும் அமை­தி­யும் நிலை­நாட்­டப்­படும் என்று அவர் உறுதி தெரி­வித்­தார். மியன்மாரில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஆசியான் முன்வைத்த சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர் சொன்னார்.