கிருமித்தொற்றுக்கு 180,000 சுகாதார ஊழியர்கள் பலி

ஜெனீவா: உல­கம் முழு­வ­தும் 80,000 முதல் 180,000 சுகா­தார ஊழி­யர்­கள் கிரு­மித்­தொற்று கார­ண­மாக பலி­யா­கி­யி­ருக்­கக்­கூ­டும் உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

எனவே உலக நாடு­கள் சுகா­தார ஊழி­யர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளித்து தடுப்­பூசி செலுத்த வேண்­டும். பணக்­கார நாடு­கள், ஏழை நாடு­க­ளுக்கு அதி­க­ள­வில் தடுப்­பூ­சி­களை வழங்க வேண்­டும் என்று உலக சுகா­தார அமைப்பு கேட்­டுக் கொண்­டுள்­ளது.

ஜன­வரி 2020க்கும் மே 2021ஆம் ஆண்­டிற்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை இது என்று அமைப்பு கூறி­யுள்­ளது.

ஆனால் இன்­ன­மும் மில்­லி­யன் கணக்­கான சுகா­தார ஊழி­யர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­ப­ட­வில்லை என்­கிறது அமைப்பு.

தடுப்­பூசி வழங்­கப்­ப­டு­வது மருந்து நிறு­வ­னங்­க­ளின் கட்­டுப்­பாட்­டில் உள்­ள­தாக சொன்ன அவர் சம­நி­லை­யற்ற தடுப்­பூசி பகிர்வு குறித்­தும் சாடி­னார்.

119 நாடு­க­ளின் தர­வு­க­ளின்­படி, சரா­ச­ரி­யாக ஐந்­தில் இரண்டு சுகா­தார ஊழி­யர்­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

ஆப்­ரிக்­கா­வில் 10ல் ஒரு சுகா­தார ஊழி­ய­ருக்­குத் தான் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. அதற்கு நேர்­மா­றாக பணக்­கார நாடு­களில் கிட்­டத்­தட்ட 80 விழுக்­காடு சுகா­தார ஊழி­யர்­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

அனைத்து நாடு­க­ளி­லும் ஒவ்­வொரு சுகா­தார ஊழி­ய­ருக்­கும் தடுப்­பூசி போட முன்­னு­ரிமை அளிக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!