பேங்காக்கில் தவிக்கும் மதுக்கூடங்கள்

பேங்­காக்: தாய்­லாந்து தலை­ந­கர் பேங்­காக்­கில் உள்ள மதுக்­கூ­டங்­கள் பெரும் சவால்­களை எதிர்­நோக்கி வரு­கின்­றன. கிரு­மிப் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்த இந்­ந­க­ரில் ஏழு மாதங்­க­ளுக்கு மதுத்­தடை விதிக்­கப்­பட்­ட­தால் இந்­நிலை உரு­வா­கி­யுள்­ளது.

'நைட்­லைஃப்' எனப்­படும் இரவு நேரக் கேளிக்கை நட­வ­டிக்­கை­களுக்­குப் பிர­ப­ல­மாக இருந்த பேங்­காக்­கில் தற்­போது வர்த்­த­கர்­கள் தங்­க­ளின் மதுக்­கூ­டங்­க­ளைத் தொடர்ந்து இயக்க சிர­மப்­ப­டு­கின்றனர். சிலர் மது­பா­னங்­க­ளுக்­குப் பதி­லாக 'மொக்­டெ­யில்' எனப்­படும் மாதிரி மது­பா­னங்­க­ளைத் தயார்­செய்­யும் முயற்­சி­யி­லும் இறங்­கி­யுள்­ள­னர்.

தாய்­லாந்­தில் இது­வரை 1.7 மில்­லி­யன் பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. கடந்த ஏப்­ரல் மாதம் பிர­பல இரவு கேளிக்கை கூடங்­களு­டன் தொடர்­பு­டைய கிரு­மிப் பர­வல் குழு­மம் உரு­வா­ன­தைத் தொடர்ந்து மதுத்­தடை விதிக்­கப்­பட்­டது.

தற்­போது மதுக்­கூ­டங்­கள் இயல்பு­நி­லை­யில் இருந்­த­தில் சுமார் 60 விழுக்­காட்டு வாடிக்­கை­யா­ளர்­களை வர­வேற்­கின்­றன. சில, சிறித­ள­வில் போதை தரக்­கூ­டிய 'க்ராத்­தொம்' இலை­யைக் கொண்டு மாதிரி மது­பா­னங்­க­ளைத் தயார்­செய்து வழங்­கு­கின்­றன. எனி­னும், மது­பா­னத்­தை­க் காட்டிலும் 'மொக்­டெ­யில்' பானத்­தின் விலை பாதிக்­கும் குறைவு. இணை­யத்­தில் மது­பா­னம் விற்­ப­தற்­கும் தடை பொருந்­தும். சில வர்த்­த­கர்­கள் விதி­மு­றை­களை மீறு­கின்­ற­னர். அவ்­வா­றின்றி சரி­யாக நடந்­து­கொள்­வோர் பெரி­தும் சிர­மப்­ப­டு­வ­தா­கக் கூறப்­படுகிறது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கு­டன் விதிக்­கப்­பட்ட மிகக் கடு­மை­யான பயணத் தடை­கள் சுற்­றுப்­ப­ய­ணத்­து­றை­யைப் பெரி­தும் நம்­பி­யி­ருக்­கும் தாய்­லாந்­தின் பொரு­ளி­யலை சீர்­கு­லைத்­துள்­ளது. ஆண்­டு­தோ­றும் சுமார் 40 மில்­லி­யன் சுற்­றுப்­ப­ய­ணி­கள் இந்­நாட்­டிற்­குச் சென்­று­வந்­த­னர். இந்த எண்­ணிக்கை இப்­போது நினைத்­துப் பார்க்­க­மு­டி­யாத அள­வு குறைந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!