கண் சிமிட்டும் நேரத்தில் நான்கு கோல்கள்

லிவர்ப்­பூல்: தோற்­கும் நிலை­யிலி­ருந்து மீண்­டு­வந்து நான்கு கோல்­களை அடித்து எவர்ட்­டனைத் திக்­கு­முக்­கா­டச் செய்­தது வாட்­ஃபர்ட். 5-2 கோல் கணக்­கில் வாட்ஃபர்ட் ஆட்டத்தை வென்றது.

ஆட்­டத்­தின் 78வது நிமி­டத்­தில்­தான் வாட்­ஃபர்ட் கோல் எண்­ணிக்­கையைச் சமப்­படுத்தியது. அதற்­குப் பிறகு ஆட்­டம் முடி­யும் வரை பொழிந்­தது கோல் மழை.

ஐந்­தில் மூன்று கோல்­களை அடித்­த­வர் முன்­னாள் எவர்ட்­டன் விளை­யாட்­டா­ளர் ஜோஷுவா கிங்.

புதிய நிர்­வா­கி­ கிளாவ்­டியோ ரனி­யே­ரி­யின் தலை­மை­யில் முதன்­மு­றை­யாக வெற்­றி­கண்­டது வாட்­ஃபர்ட். இனி இந்த பிரி­மி­யர் லீக் பரு­வத்­தில் சிறப்­பாக ஆட­மு­டி­யும் என்ற நம்­பிக்கை இவ்வணிக்குப் பிறந்துள்ளது.

மற்­றோர் ஆட்­டத்­தில் பிரைட்­டனை 4-1 எனும் கோல் கணக்­கில் வென்­றது லீக்­கின் நடப்பு வெற்­றி­யா­ளர் அணி­யான மான்­செஸ்­டர் சிட்டி. முற்­பாதி­யாட்­டத்­தில் சிட்டி 3-0 எனும் கோல் கணக்­கில் முன்­ன­ணி­யில் இருந்­தது. பிற்­பா­தி­யில் பிரைட்­டன் விட்­டுக்­கொ­டுக்­கா­மல் விளை­யா­டி­ய­போ­தும் சோபிக்­க­வில்லை.

நோரிச் சிட்­டியை 7-0 எனும் கோல் கணக்­கில் வதம் செய்­தது செல்சி. ஏழு கோல்­களில் மூன்றை அடித்­த­வர் அடுத்த நட்­சத்­தி­ர­மாக உரு­வெ­டுத்து வரும் மேசன் மவுன்ட். நேற்­றி­ரவு நில­வ­ரப்­படி லீக் பட்­டி­ய­லில் செல்சி முதலி­டத்­தில், நோரிச் கடைசி இடத்­தில். மான்­செஸ்­டர் சிட்டி இரண்­டாம் இடத்தை வகிக்­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!