சிட்னி: ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஹாங்காங் குடிமக்களுக்கு இரு நிரந்தர விசாவை ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிமுகம் செய்யவிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவில் வசிக்கும் ஏறத்தாழ 9,000 ஹாங்காங் குடிமக்கள் நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிக்கத் தகுதிபெறுவர். விண்ணப்பகாலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என குடிநுழைவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்க் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 1) தெரிவித்துள்ளார்.