ஜகார்த்தா: இந்தோனிசீயாவில்
6 முதல் 11 வயதுடைய சிறார்களுக்கு சினோவேக் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதன் உணவு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கூறியது.
சிலி, கம்போடியா ஆகிய நாடுகள் சிறார்களுக்கு சினோவேக் தடுப்பூசி போட ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து தற்போது இந்தோனீசியாவும் அதற்கு அனுமதி அளித்துள்ளது.
பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியுள்ள நிலையில், சிறார்களுக்கான தடுப்பூசி முக்கியமான ஒன்றாகிறது என்று கட்டுப்பாட்டு அமைப்பின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
சிறார் மருத்துவர் சங்கத்தின் கூடுதல் பரிந்துரைக்காக காத்திருப்பதாகவும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சிறார்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்றார் சுகாதார அமைச்சர்.