தோக்கியோ: வர்த்தக பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் காலத்தைக் குறைப்பது குறித்து ஜப்பானிய அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக ஜப்பான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் 8ஆம் தேதி முதல் இது நடப்புக்கு வரக்கூடும் என்று கூறப்
படுகிறது. இதன்படி வர்த்தம் தொடர்பாக ஜப்பானுக்குச் செல்வோர் மூன்று நாட்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் ஜப்பான் செல்வோர் தற்போது 10 நாட்களுக்குத்
தனிமைப்படுத்தபடுகின்றனர்.
அத்துடன் ஜப்பானுக்குள் அனு
மதிக்கப்படுவோர் எண்ணிக்கையை இம்மாத பிற்பகுதி முதல் 5,000மாக அதிகரிக்கவும் அந்நாட்டு அரசாங்கம் திட்டமிடுகிறது. தற்போது இது 3,500ஆக உள்ளது.
மேலும் ஜப்பானின் தொழில்நுட்ப பயிற்சி திட்டத்தின்கீழ் வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் போன்றோரும் ஜப்பானுக்குச் செல்லமுடியும்.
ஜப்பானில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் உறுதியாக எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால் எல்லை கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவது குறித்து ஜப்பான் ஆராய்ந்து வரு
வதாக அதன் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மோடேகி சொன்
னார்.
இதற்கிடையே, லிபரல் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளராக மோடேகி நியமிக்கப்படக்
கூடும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று ஊடக செய்திகள் கூறுகின்றன.