யங்கூன்: மியன்மார் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மியன்மார் ராணுவ ஆட்சிக் குழுத் தலைவர் மின் ஆங் ஹிலைங் கேட்டுக்கொண்டு
உள்ளார்.
மியன்மாரில் ஆங் சான் சூச்சியின் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டு ஒன்பது மாதங்களானதைக் குறிக்கும் வகையில் அந்நாட்டு தொலைக்காட்சியில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.
அரசியல் சவால்களுக்கு மத்தியில், மியன்மார் மக்கள்
தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் ஒத்துழைப்பால் மட்டுமே நாடு முற்போக்கானதாகவும் நிலையானதாகவும் இருக்கும் என்றார் அவர்.
"அரசியல் ரீதியாக, நாங்கள் பல்வேறு வகையான விமர்சனங்
களையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்கிறோம்.
"நாட்டின் வளர்ச்சி, நிலைத்தன்மையை உறுதி செய்ய நமது மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது," என்று அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், கிருமிப் பரவல் இப்போது கட்டுப்பாட்டில் இருப்பதால், கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து அதிகாரிகள் யோசித்து வருவதாகவும் சொன்னார்.
45 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 35 விழுக்காட்டினரும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மாணவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.