இரண்டு வாரங்களாகக் காணாமல் போன நான்கு வயது சிறுமி கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் வெளிப்புற முகாமிடும் இடம் ஒன்றிலிருந்து கடத்தப்பட்ட நான்கு வயது சிறுமி அந்நாட்டு போலிசார் தெரிவித்தார்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் கார்னார்வோன் கடலோர நகரில் கிலியோ ஸ்மித் என்ற அந்தச் சிறுமி பூட்டப்பட்ட வீட்டில் இன்று 3ஆம் தேதி தனியாக இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். பெர்த் நகரிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘பிளோஹோள்ஸ்’ முகாமிடும் இடத்திலிருந்து அந்தச் சிறுமி அக்டோபர் 16ஆம் தேதி கடத்தப்பட்டாள். அவள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் அதற்குச் சற்று தொலைவிலேயே இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.கடத்தலுக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

சம்பவத்தின் தொடர்பில் அதிகாரிகள் 36 வயது ஆடவர் ஒருவரை விசாரித்து வருகின்றனர். அந்த ஆடவர், கடத்தப்பட்ட சிறுமியின் குடும்பத்துடன் தொடர்புடையவர் அல்லர். “இந்தச் சிறுமி உயிருடன் கண்டுபிடிக்கப்படுவாள் என்ற நம்பிக்கை எங்களைவிட்டு அகலவில்லை. இதனால் இந்நாடே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது,” என்று மேற்கு ஆஸ்திரேலியாவின் காவல்துறை ஆணையாளர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!