அரசாங்க அதிகாரிகளுக்கு பிலிப்பீன்ஸ் அதிபர் எச்சரிக்கை

மணிலா: கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க பிலிப்பீன்ஸ் ஆயத்தமாகி வருகிறது.


ஆனால், அங்கு கொரோனா தடுப்பூசி நடவடிக்கையில் வேகமில்லை எனச் சொல்லப்படுகிறது.


இந்நிலையில், தடுப்பூசி போடுவதில் தங்களது இலக்கை எட்டத் தவறும் அரசாங்க அதிகாரிகள் தண்டிக்கப்படுவர் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே எச்சரித்து இருக்கிறார்.


கொரோனா தொற்றால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகளில் பிலிப்பீன்சும் ஒன்று. அங்கு தடுப்பூசிக்குத் தகுதியுள்ள 77 மில்லியன் பேரில் மூன்றில் ஒரு பகுதியினரே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.


போதுமான கையிருப்பு இருந்தாலும் அங்கு இப்போதைக்குச் சராசரியாக நாளொன்றுக்கு 500,000 பேர்க்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.


அந்த எண்ணிக்கையைக் குறைந்தது ஒரு மில்லியனாக உயர்த்த முடியாததற்கு எந்தக் காரணமும் இல்லை என்று டுட்டர்டே கூறியுள்ளார்.


இந்நிலையில், தங்களிடம் கொடுக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளை உரிய முறையில் பயன்படுத்ததாத அல்லது மிக விரைந்து வழங்காத உள்ளூர் அதிகாரிகள் தண்டிக்கப்படுவர் என்று அவர் எச்சரித்துள்ளார்.


அதனுடன், மாநிலங்களுக்கு மிக விரைந்து தடுப்பூசிகளை எடுத்துச் செல்ல விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தும்படி காவல்துறையையும் இராணுவத்தையும் திரு டுட்டர்டே கேட்டுக்கொண்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!