தென்னமெரிக்காவிலுள்ள பனாமாவில் ஹலோவீன் கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு ஒன்று நிகழ்ந்தது. இரண்டு குண்டர் கும்பல்களுக்கு நடுவே நடந்த இந்த மோதலில் எட்டுப் பேர் மாண்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
சான்டா அனா வட்டாரத்தில் பிரபல தென்கொரிய திகில் தொடரான ‘ஸ்குவிட் கேம்’ மைப் பின்புலமாகக் கொண்டு அந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த எட்டுப்பேரில் மூவரது சடலங்கள் கொண்டாட்ட இடத்திற்கு அருகிலுள்ள பெரிய குப்பைத்தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இப்படிப்பட்ட மோதலில் ஈடுபடுவது பனாமாவில் வழக்கமாக உள்ளது.