விளையாட்டுத் துளிகள்

பிரிமியர் லீக்: யுனைடெட்டை மண்ணைக் கவ்வ வைத்த சிட்டி

மான்செஸ்டர்: இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட்டை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது அதன் பரம வைரியான மான்செஸ்டர் சிட்டி. ஏற்கெனவே பிரச்சினையில் மூழ்கிக் கிடந்த யுனைடெட் மீது துயரத்தைக் குவித்தது சிட்டி. யுனைடெட் நிர்வாகி ஒலே குனா ஷொல்சியா தனது வேலையைத் தக்கவைத்துக்கொள்ள இந்த ஆட்டத்தை வெல்லவேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

கடந்த இரு ஆட்டங்களைப் போலவே எதிர் அணியைக் கோலடிக்க விடாமல் இருக்கத் தேவையான உத்திகளில் யுனைடெட் கூடுதல் கவனம் செலுத்தியது. இந்த ஆட்டத்தில் அந்த அணுகுமுறை கைகொடுக்கவில்லை. எப்போதும்போல் சிட்டி முன்னிலை ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தியது. அதேபோல் யுனைடெட்டும் செய்திருந்தால் வெற்றிபெற வாய்ப்புகள் இருந்திருக்கலாம். காரணம், சரியாகப் பயன்படுத்தப்படாத சிறந்த முன்னிலை ஆட்டக்காரர்கள் அணியில் உள்ளனர்.

ஸ்காட்லாந்தை நசுக்கிய இந்தியா

துபாய்: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ண ஆட்டத்தில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இந்தியா. இந்த வெற்றியின் மூலம் நேற்றிரவு நிலவரப்படி அரையிறுதியாட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இந்தியா தக்கவைத்துக்கொண்டது. இதுவரை சரியாக விளையாடாததால் அரையிறுதி ஆட்டத்திற்குச் செல்வதற்கான வாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொள்ள இந்தியா அபாரமாக வெல்லவேண்டியிருந்தது. அதைச் செய்துகாட்டியது. ஸ்காட்லாந்தின் அனைத்து விக்கெட்டுகளையும் 17.4 ஓவர்களில் வெளியேற்றியது இந்தியா. ஸ்காட்லாந்து எடுத்தது 85 ஓட்டங்கள் மட்டுமே.

இரண்டாம் பிரிவில் ஒன்றுக்கு மேலான அணிகள் ஒரே அளவிலான புள்ளிகளை எடுத்தால் அரையிறுதிச் சுற்றுக்குச் செல்லும் அணிகளைத் தேர்ந்தெடுக்க ஒவ்வோர் அணியின் மொத்த ஓட்ட விகிதம் கணக்கில் எடுக்கப்படும். அந்நிலை ஏற்பட்டால் இந்தியாவிற்குக் கைகொடுக்கும் வகையில் ஆகக் கடைசி நிலவரப்படி அதன் ஓட்ட விகிதம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளையும்விட அதிகம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!