வியன்னா: ஆஸ்திரியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் உணவகங்கள், சிகை அலங்காரக் கடைகள் ஆகியவற்றில் அனுமதிக்கப்படமாட்டார்கள். அந்நாட்டில் கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பதால் இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. உணவகங்களுக்குச் செல்வோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கவேண்டும், ஆனால் உணவை வழங்குவோருக்கு இந்த நிபந்தனை கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் ஹோட்டல்களிலும் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே வேளையில் ஏற்கெனவே கிருமித்தொற்று ஏற்பட்டு குணமமைடைந்தோருக்கு அனுமதி உண்டு. 25 பேருக்கு மேல் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப் பாடுகளை நடைமுறைப்படுத்த நான்கு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் இதுவரை 64 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.