பாக்தாத்: ஈராக் பிரதமரின் வீட் டின் மீது நேற்று அதிகாலை ஆளில்லா வானூர்தி (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
பாக்தாத் நகரின் 'க்ரீன் ஸோன்' பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டாலும் பிரதமர் முஸ்தஃபா அல்-காதேமி காயமின்றி தப்பினார்.
தாம் தப்பிவிட்டதாகவும் மக்கள் அமைதி காக்குமாறும் நேற்று காலையில் அவர் தமது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டார்.
"நான் நலமுடன் உள்ளேன். கடவுளுக்கு நன்றி. நாட்டின் நன்மை கருதி அனைவரும் அமைதியுடனும் கட்டுப்பாடுகளுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தம்மைக் கொலை செய்யும் முயற்சி தோல்வியடைந்துவிட்டதா கவும் திரு முஸ்தஃபா தெரிவித்தார். 'க்ரீன் ஸோன்' வட்டாரம் கடுமையான பாதுகாப்பின்கீழ் உள்ளது. அமெரிக்க தூதரகம்கூட அந்தப் பகுதியில்தான் உள்ளது.
இருப்பினும் இந்த வட்டாரம் ராக்கெட் தாக்குதலுக்கு அடிக்கடி இலக்காகிறது.
நேற்று நடைபெற்ற 'டிரோன்' தாக்குதலை இரண்டு பாதுகாப்புப் படைத் தரப்புகள் உறுதி செய்தன.
தாக்குதல் நடத்தப்பட்ட தகவல் பரவியதும் மேலும் அதிகமான பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டதாக செய்தி நிறுவனங்கள் கூறின.
பிரதமரின் வீட்டின் சில பகுதிகளும் அவரது வாகனமும் சேதமடைந்திருப்பதைக் காட்டும் படங்கள் அரசாங்க செய்தி நிறுவனமான 'ஐஎன்ஏ'யில் வெளியிடப்பட்டன.
வெடிபொருட்களின் சிதறல்களை யும் அந்த வீட்டின் அருகில் அதி காரிகள் கண்டெடுத்தனர். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.