வெல்லிங்டன்: கொவிட்-19 கொள்ளை நோய்ப் பரவலிலிருந்து ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளியல்கள் மீண்டுவருவதில் கவனம் செலுத்தும் மாநாட்டை நியூசிலாந்து ஏற்று நடத்துகிறது. மெய்நிகராக நடைபெறும் இம்மாநாட்டில் ஏபெக் எனும் ஆசிய பசிபிக் வட்டாரத்திற்கான வர்த்தகக் குழுவைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
நேற்று தொடங்கிய மாநாட்டில் விநியோகச் சங்கிலி தொடர்பிலான ஆதரவு, கரியமில வாயுவற்ற பொருளியல்களை உருவாக்குவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நியூசிலாந்து மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனையொட்டி மாநாடு முழுமையாக மெய்நிகராக நடத்தப்படுகிறது.