சிட்னி: இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலக்கரியை விற்கப்போவதாக ஆஸ்திரேலியா கூறியுள்ளது. பருவநிலை மோசமாக மாறுவதைத் தடுப்பதற்காக வரையப்பட்ட உடன்படிக்கையை மறுத்ததைத் தொடர்ந்து அது இவ்வாறு கூறியுள்ளது. சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் நிலக்கரி பயன்படுத்தப்படுவதை முழுமையாக நிறுத்துவது உடன்படிக்கையின் இலக்கு.
வரும் ஆண்டுகளில் நிலக்கரிப் பயன்பாட்டை நிறுத்த 40க்கும் அதிகமான நாடுகள் 'கோப்26' மாநாட்டில் ஒப்புக்கொண்டன. அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா மூன்றும் ஒப்புக்கொள்ளவில்லை.