பெய்ஜிங்: சீன அதிபர் சீ ஜின்பிங் தனது பதவியை மேலும் வலுப்படுத்திக்கொள்ள இருக்கிறார். ஓராண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுகூடுகிறது.
கட்சியில் முடிவெடுக்கும் பொறுப்பில் இருக்கும் சுமார் 400 உறுப்பினர்கள் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு சந்திப்பு நடத்துவர். இச்சந்திப்பு ரகசியாக நடத்தப்படும்.
இது, 1982ஆம் ஆண்டில் திரு டெங் சியாவ்பிங் நீக்கிய கட்சித் தலைவர் பதவியைத் திரு சீ மீண்டும் கொண்டுவர வழிவகுத்துள்ளது.