விளையாட்டுச் செய்திகள்

இந்திய கிரிக்கெட்: கோஹ்லி-சாஸ்திரி இணை முடிவுக்கு வந்தது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரியுடன் விராத் கோஹ்லி. கோப்புப் படம்

அபுதாபி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ரவி சாஸ்திரிக்குக் கடைசி போட்டி. அணித் தலைவராக விராத் கோஹ்லிக்குக் கடைசி 20 ஓவர் போட்டி. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எழுச்சியை ஏற்படுத்திய, புகழ்பெற்ற

பயிற்றுவிப்பாளர்-அணித்தலைவர் இணை நேற்று முன்தினம் நடந்த நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தின் வெற்றியோடு முடிவுக்கு வந்தது.

ஆனால் 20 ஓவர் உலகக் கிண்ணத்தை இந்திய அணி வெல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் போனது அனைவருக்கும் ஏமாற்றமளித்தது.

கோஹ்லி-சாஸ்திரி இணையின் வரலாற்றில் ஐசிசி கிண்ணம் வெல்லாதது கரும்புள்ளியாக இருந்தாலும், அவர்களின் கீழ் இந்திய அணி பெரும் மாற்றங்களைக் கண்டது. குறிப்பாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எழுச்சி பெற்றது.

இவர்களின் இணை அணி வீரர்களிடையே பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இந்த இணை முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கெடுத்தபோது அது கண்கூடாக தெரிந்தது.

கடைசி போட்டிக்குப் பிறகு பேசிய ரவி சாஸ்திரி, "உலகின் சிறந்த அணிகளை 3 பாணி கிரிக்கெட்டிலும் நாம் வீழ்த்தியுள்ளோம். அந்த அளவிற்கு பலமிக்க அணியில் நானும் ஒரு அங்கமாக இருந்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். உலகின் பலமான அணிகளில் இந்தியாவும் முக்கியமான ஒன்றாக உள்ளது," என்றார்.

புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் நியூசிலாந்துக்கு எதிராக தொடங்கும் 20 ஓவர், டெஸ்ட் தொடரிலிருந்து பொறுப்பேற்கவுள்ளார்.

இன்று நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்கான முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதவுள்ளன.

சுசுகி கிண்ணக் காற்பந்துத் தகுதிச் சுற்று: புருணை விலகல்

பண்டார் ஸ்ரீ பகவான்: அடுத்த மாதம் நடைபெறவுள்ள சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் இருந்து புருணை வெளியேறியது. கொவிட்-19 கிருமித்தொற்றின் தாக்கத்தால் இப்போட்டிக்குத் தயாராக முடியாமல் போனதால், வெளியேறுவதாக புருணை தெரிவித்துள்ளது.

வரும் டிசம்பர் 1ஆம் தேதி தீமோர்-லெஸ்தே அணியை தகுதிச் சுற்று ஆட்டத்தில் எதிர்கொள்ள இருந்தது புருணை. ஆனால் அக்குழு தற்போது விலகிக்கொண்டதால் தீமோர்-லெஸ்தே குழு, தாய்லாந்து, சிங்கப்பூர், மியன்மார், பிலிப்பீன்ஸ் ஆகிய குழுக்களுடன் ‌'ஏ' பிரிவில் விளையாடும்.

ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 2020ஆம் ஆண்டிற்கான சுசுகி கிண்ணப் போட்டி கிருமிப் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

நியூகாசலின் புதிய நிர்வாகி எடி ஹாவ்

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக்கின் நியூகாசல் காற்பந்துக் குழுவின் நிர்வாகியாக எடி ஹாவ் நியமிக்கப்பட்டுள்ளார். நியூகாசலின் முன்னாள் நிர்வாகியான ஸ்டீவ் புரூஸ் சென்ற அக்டோபர் மாதம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டு ஒப்பந்தத்தில் எடி ஹாவ் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்பு போர்ன்மத் குழுவின் நிர்வாகியாக இருந்த எடி, அக்குழு இபிஎல் தொடரிலிருந்து வெளியேறியதையடுத்து, சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் அக்குழுவிலிருந்து விலகினார். இவர் தலைமையில், நியூகாசல் வரும் 20ஆம் தேதி இபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள பெர்ண்ட்ஃபோர்ட் குழுவை எதிர்கொள்ளவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!