ஹாங்காங்: சீனாவின் குண்டாங் மாநிலத்துடன் தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்திற்குத் தயாராகி வருகிறது ஹாங்காங்.
இதன்படி டிசம்பர் மாதம் முதல் அங்கிருந்து நாளொன்றுக்கு ஆயிரம் பேரை அனுமதிக்க ஹாங்காங் முடிவு செய்துள்ளது.
வர்த்தக, இதர அவசர தேவை களுக்காக சீனாவுடன் படிப்படியாக பயணத்தைத் தொடங்குவதே முக்கியமானது என்றார் ஹாங்காங் தலைவர் கேரி லாம்.
ஆனால் தொடர்பு அறியப்படாத கிருமித்தொற்று சம்பவம் ஒன்று கண்டறியப்பட்டாலும் இந்த தனிமைப்படுத்தல் இல்லாத பயணம் ரத்து செய்யப்படும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் கூறினர். இந்த எண்ணிக்கையை இரண்டாக அதிகரிப்பது குறித்தும் ஹாங்காங் வலியுறுத்தி வருகிறது.
ஷென்சென் அல்லது ஜுஹாய் பகுதிகளுக்குத் தனிமைப்படுத்தல் இல்லாமல் செல்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அனைத்துலக எல்லையைத் திறக்கவும் ஹாங்காங் திட்டமிடுகிறது.