கிருமிப் பரவல் குறித்து துப்பு தருவோருக்கு சீனா பரிசு

பெய்­ஜிங்: சீனா­வில் அண்­மைய கிரு­மிப் பர­வல் எங்கிருந்து, எப்­படி தொடங்­கி­யது என்­பது பற்றி துப்பு கொடுப்­போ­ருக்கு ரொக்க பரி­சுத் தரு­வ­தாக சீன நக­ரம் ஒன்று அறி­வித்­துள்­ளது.

சீனா­வின் நாற்­ப­துக்கும் மேற்­பட்ட நக­ரங்­களில் தற்­போது கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

கடந்த மூன்று வாரங்­க­ளாக இரட்டை இலக்­கத்­தில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன. நேற்று அங்கு 43 உள்­ளூர் தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

இந்­நி­லை­யில், கிரு­மிப் பர­வல் தொடங்­கி­யது குறித்து துப்பு தரு­வோ­ருக்கு 100,000 யுவன் (21,000 வெள்ளி) பரிசு தரு­வ­தாக ர‌ஷ்ய எல்­லை­யை­யொட்டி இருக்­கும் வடக்கு நக­ர­மான ஹெய்ஹே நகர அதி­கா­ரி­கள் அறி­வித்­துள்­ள­னர்.

"கிரு­மிப் பர­வல் எவ்­வாறு தொடங்­கி­யது என்­பதை விரை­வில் கண்­ட­றிந்து நோய் பர­வல் சங்­கி­லியை முறி­ய­டிப்­ப­தற்கு, 'மக்­கள் போர்' அவ­சி­யம்," என்று அந்­ந­கர அரசு தெரி­வித்­துள்­ளது.

இணை­யம் மூலம் வெளி­நா­டு­களில் இருந்து பொருட்­களை வாங்­கி­யோர் அவற்றை உட­ன­டி­யாக சுத்­தம் செய்­யு­மா­றும் அவற்­றைப் பரி­சோ­த­னைக்கு அனுப்­பு­மா­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த கிரு­மிப் பர­வல் கார­ண­மாக மில்­லி­யன் கணக்­கா­னோர் முடக்­க­நி­லை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். உள்­நாட்டு பயண விதி­களும் கடு­மை­யாக்­கப் பட்­டுள்­ளன.

ஹெனான் பகு­தி­யில் ஒரு கிரு­மித்­தொற்று குழு­மம் பள்­ளிக்­

கூ­டத்­தோடு தொடர்­பு­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. சீனா­வில் மூன்று முதல் 11 வய­துக்­குட்பட்ட 3.5

மில்­லி­யன் பிள்­ளை­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!