பெய்ஜிங்: சீனாவில் 11.11 எனும் அதிகமானோர் இணையத்தில் பொருள் வாங்கும் நாளான இன்று, பொட்டலங்களில் கிருமித்தொற்று இருக்கும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்து
உள்ளனர்.
ஹுபெயில் செயல்படும் குழந்தைகளுக்கான ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் மூவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கிருமித்தொற்றை நாட்டில் இருந்து முற்றிலும் துடைத்தொழிக்க சீனா தொடர்ந்து முயற்சித்தால், அது பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் என்று சீனாவின் மூத்த கிருமி ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.
ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் குவாங் யி, கிருமித்தொற்றைக் களைவதற்காக பெருமளவில் நடத்தப்படும் பரிசோதனைகள், நீண்ட தனிமைப்படுத்தல்கள் போன்ற சீனாவின் முயற்சிகளை குறை கூறினார்.
மக்களிடையே நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க, சீனாவின் பெருமளவிலான தடுப்பூசித் திட்டம் எந்தளவுக்கு உதவியது என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.