வெலிங்டன்: ஆசிய-பசிஃபிக் வட்டாரத்தில் பனிப்போர் காலத்தின் பதற்றங்கள் திரும்பக்கூடாது என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் கூறினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அடுத்த வாரம் அவர் சந்திக்கவுள்ள நிலையில், உலகளாவிய ஒத்துழைப்பையும் கோரினார்.
சீனாவின் செல்வாக்கைக் குறைக்கும் வகையில், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளை அவர் குறிப்பிடுவதாக கருதப்படுகிறது.