சிட்னி: ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் சுய-தணிக்கை முறையை நிறுத்துவதற்கும் ரகசிய தொழில்நுட்ப திருட்டைத் தடுக்கவும் வெளிநாட்டுத் தலையீட்டிற்கான விதிகளைக் கடுமையாக்கியுள்ளதாக ஆஸ்திரேலியா கூறியது.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிரான அனைத்துலக எல்லைக் கட்டுப்பாடுகளை ஆஸ்திரேலியா தளர்த்தியுள்ள நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் அதிகமானோர் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பவுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக கல்வி ஆஸ்திரேலியாவின் நான்காவது பெரிய ஏற்றுமதி சந்தையாகும். இங்கு பயிலும் சீன மாணவர்கள் செலுத்தும் கட்டணம் ஆஸ்திரேலியாவின் வருவாயில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
ஜனநாயக செயல்பாடு இல்லாத நாடுகளின் ராணுவங்கள் அல்லது அரசாங்கங்களுடனான தொடர்பை சில ஆராய்ச்சியாளர்கள் அறிவிக்காததன் மூலம் ரகசிய தொழில்நுட்ப திருட்டு ஏற்படுவதாகவும் அதன் மூலம் தனது வர்த்தக நன்மையை இழக்க நேரிடும் என்று கவலை கொண்டுள்ள ஆஸ்திரேலியா இத்தகைய வழிகாட்டுதல்
களைக் கடுமையாக்கியுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களில் சீனாவின் பெயர் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஹாங்காங் ஆதரவாளர்கள் துன்புறுத்தப்பட்டதைக் குறிக்கிறது.
ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் அதிக எண்ணிக்கையிலான சீன மாணவர்கள் இருப்பது அங்கு கல்வித் தொடர்பாக சுய-தணிக்கை சூழல் உருவாகியுள்ளது. கொவிட்-19 குறித்து விசாரணைக்கு ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்தபோது சீனா-ஆஸ்திரேலிய உறவு மோசமடைந்தது.