ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான கிறிஸ்மஸ் தீவின் காடுகளில் இருந்து மில்லியன்கணக்கான செந்நண்டுகள், பெருங்கடலை நோக்கிய தங்களது வருடாந்திர இடப்பெயர்வைத் தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட 50 மில்லியன் செந்நண்டுகள் இவ்வாறு இடம்பெயர்கின்றன. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பெய்யும் முதல் மழையின்போது இந்த இடப்பெயர்ச்சி தொடங்குகிறது.
கடல்நீரில் குளித்து முழுகியபின் இந்நண்டுகள் இனப்பெருக்கத்திற்கு தயாராகுகின்றன.
இந்த நண்டுகள் பிறருக்குக் காயத்தை விளைவிக்கக்கூடியவை அல்ல. இவற்றின்மீது மிதிக்காமல் இருக்கும்படி சுற்றுப்பயணிகளை அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
