வெனிசுவேலாவில் 8,000க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஆகப் பெரிய பல்லிசைக் குழுவுக்கான கின்னஸ் உலகச் சாதனையைப் படைத்துள்ளனர்.
தலைநகர் கரக்காசில் 8,573 இசைக்கலைஞர்கள் திரண்டு ஐந்து நிமிடத்துக்கு இசை வாசித்தனர். கலைஞர்கள் 12 வயதுக்கும் 77 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். ஆகப் பெரிய பல்லிசைக் குழுவுக்கான முன்னைய சாதனையில் 8,097 இடம்பெற்றிருந்தனர்.
படம்: ஏபி