தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தும் ஜெர்மனி அனைவரும் நோயெதிர்ப்புத் திறனை பெறுவர் என்கிறார் ஜெர்மனியின் சுகாதார அமைச்சர்

பிர­சல்ஸ்: ஜெர்­ம­னி­யில் வரும் குளிர்காலத்தில் அனைவரும் நோயெ­திர்ப்பை அடைந்­து­வி­டு­வார்­கள் என்று அந்­நாட்டு சுகா­தார அமைச்­சர் ஜென்ஸ் ஸ்பான் கூறி­யுள்­ளார்.

குளிர்­கா­லம் முடி­வு­றும்­போது ஜெர்­ம­னி­யில் கிட்­டத்­தட்ட அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்­க­லாம் அல்­லது கிரு­மித்­தொற்­றில் இருந்து மீண்­டி­ருக்­க­லாம் அல்­லது மாண்­டு­வி­டு­வார்­கள் என்­றும் அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.

பெர்­லி­னில் நடந்த செய்­தி­ யாளர் சந்­திப்பு ஒன்­றில் பேசிய அவர், "நோயெ­திர்ப்பை அடைந்­து­ வி­டு­வோம். ஆனால் எந்த வழி­யில் அதை அடைய போகி­றோம் என்­ப­து­தான் கேள்வி. தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தன் மூலமா அல்­லது கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வ­தன் மூலமா? "தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு நோயெ­திர்ப்பு அடை வதைத்தான் நாங்­கள் பரிந்­து­ரைக்­கி­றோம்," என்றார்.

கிரு­மிப் பர­வல் மோச­ம­டைந்து வரும் நிலை­யில், தடுப்­பூசி போட்­டுக் கொள்­ள­வும் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வும் ஜெர்மனி அர­சாங்­கம் மக்­களை வலி­யு­றுத்தி வரு­கிறது.

செவ்­வாய்க்­கி­ழமை நில­வ­ரப்­படி முந்­தைய ஏழு நாட்­களில் 100,000 பேருக்கு கிட்­டத்­தட்ட 400 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர். இது முந்­தைய கிரு­மித்­தொற்று காலத்­தில் இருந்­த­தை­விட இரண்டு மடங்கு அதி­கம். ஒரு சில பகு­தி­களில் அந்த எண்­ணிக்கை 650 மற்­றும் 1,000ஆக­வும் உள்­ளது.

இந்­நி­லை­யில், முடக்­க­நிலை உட்­பட எந்­த­வொரு கட்­டுப்­பா­டு­ம் வேண்­டா­மென்று தவிர்க்­கக்­கூ­டிய ‌சூழ்­நி­லை­யில் நாம் இல்லை என்­றும் ஸ்பான் சொன்­னார்.

ஐரோப்­பிய நாடு­களில் ஒரு வாரத்­தில் இரண்டு மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தொற்று சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக சில ஐரோப்­பிய நாடு­களில் முடக்­க­நிலை, கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் கொண்டு வரப்­பட்­டுள்­ளன.

அதே­ச­ம­யம் அவற்­றுக்கு எதிர்ப்புத் தெரி­வித்­தும் மக்­கள் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

இத­னி­டையே, பிரஞ்­சுப் பிர­த­மர் ஸான் காஸ்­டெக்­ஸுக்­குக் தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது.

அவர் 10 நாள் தன்னை தனி­மைப்படுத்திக்கொள்வார் எனக் கூறப்­பட்­டுள்­ளது.

இந்நிலையில் ஜெர்­மனி, டென்­மார்க் நாடு­க­ளுக்­குப் பய­ணிக்க வேண்­டாம் என்று தன் குடி­மக்­க­ளுக்கு அமெ­ரிக்கா பயண எச்சரிக்கை விடுத்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!