லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா க்ரீஸி. இவர் திங்கள் கிழமை அன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்க தன்னுடைய மூன்று மாத ஆண் குழந்தையுடன் நாடாளுமன்றத்திற்குச் சென்றார்.
இந்நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றம் அவருக்கு அனுப்பிய கடிதத்தில் இனிமேல் நாடாளுமன்றத்திற்கு குழந்தையை அழைத்து வரவேண்டாம் என்றும் அதற்கு நாடாளுமன்ற விதிமுறைகளில் இடமில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
இதனைத் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர் நாடாளுமன்ற விதிமுறைகளில் கட்டாய மாற்றம் தேவை என்று கூறியுள்ளார். அவருக்கு ஆதரவாகவும் பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் பலரும் பதிவிட்டுள்ளனர்.
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் என்பது குறிப்பிடத்தக் கது. இது தொடர்பாக பேசிய அவர், "பேறுகால விடுப்பு இல்லை. ஊழியர்களுக்கான உரிமைகள் இல்லை," என்று கூறினார்.