கேமரன் ஹைலேண்ட்ஸ் நிலச்சரிவில் புதையுண்ட சரக்கு வாகனம்

ஈப்போ: கேம­ரன் ஹைலேண்ட்ஸ் - சிம்­பாங் பூலாய் சாலை­யில் நேற்று ஏற்­பட்ட நிலச்­ச­ரி­வில் சிக்கி ஒரு வாக­னம் புதை­யுண்­டது.

இந்­தச் சம்­ப­வம் பிற்­ப­கல் 1.30 மணிக்கு நிகழ்ந்­தி­ருக்­க­லாம் என்று பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

அத­னால் அப்­ப­கு­தி­யில் வாக­னப் போக்­கு­வ­ரத்து தடை­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் குறித்து பிற்­ப­கல் 1.44 மணிக்கு தக­வல் கிடைத்­த­தாக பேராக் மாநி­லத்­தின் தீய­ணைப்பு மற்­றும் தேடி மீட்­கும் துறை­யின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

நிலச்­ச­ரி­வின் இடி­பா­டு­கள் சாலை­யின் இரு பக்­கங்­க­ளி­லும் பெரும் அளவு விழுந்து கிடந்­த­தாக அவர் தெரி­வித்­தார்.

முதல் கட்ட விசா­ர­ணை­யில், ஒரு வாக­னம் நிலத்­தில் புதை­யுண்­டி­ருப்­ப­தாக அவர் கூறி­னார். பின்­னர் மாலை 5 மணி­ய­ள­வில் நிலச்சரிவில் புதையுண்ட வாகனம் ஒரு சரக்கு வாக­னம் என்று அடையாளம் காணப்பட்டது.

அந்த வாக­னத்­தில் பய­ணம் செய்­த­வர்­க­ளின் விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

நிலச்சரிவில் சிக்கிய நசுங்கிய சரக்கு வாகனத்தின் படம் ஒன்றை பேராக் தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ளது.

இரவு 7.00 மணி நிலவரப்படி

அந்த சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் 31 வயது ஆடவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்தனர். அவரை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கேமரன் ஹைலேண்ட்ஸில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு ஈப்போவுக்கு அந்த வாகனம் சென்று கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, நிலச்சரிவில் ஒரே ஒருவர் மட்டும் சிக்கியிருந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவரை விரைவில் காப்பாற்றி விடுவோம் என்று மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

நிலச்­ச­ரி­வுக்­கான கார­ணம் குறித்து அதி­கா­ரி­கள் விசா­ரணை மேற்­கொண்டு வரு­வ­தாக பேராக் உள்­கட்­ட­மைப்பு, எரி­சக்தி, தண்­ணீர், பொதுப்­போக்­கு­வ­ரத்­துக் குழு ஆகி­ய­வற்­றுக்­குத் தலைமை வகிக்­கும் முக­மது ஸோல்கஃப்ளி ஹருன் தெரி­வித்­தார்.

அப்­ப­கு­தி­யில் தொடர்ச்­சி­யாக மழை பெய்­து­வ­ரு­வ­தால் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டுள்­ளது. நிலை­மையை மாவட்ட பொதுப் பணித்­து­றை­யும் மத்­திய போக்குவரத்துத் துறை­யும் தொடர்ந்து கண்­கா­ணித்து வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!