கட்டுப்பாடுகளை இறுக்கும் ஆஸ்திரேலிய மாநிலங்கள்

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஓமிக்­ரான் உரு­மா­றிய தொற்­றுக்கு ஆளா­னோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­தைத் தொடர்ந்து, அங்கு கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டு­வதில் குழப்பம் நிலவுகிறது.

ஓமிக்­ரான் தொற்று மற்ற உரு­மா­றிய தொற்­று­க­ளைக் காட்­டி­லும் வீரி­யம் குறை­வா­ன­தாக இருக்­கும் என்ற நம்­பிக்­கை­யில் அந்­நாட்­டின் மத்­திய அர­சாங்­கம் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தும் தனது திட்­டங்­க­ளைத் தொடர்ந்து செயல்­ப­டுத்த முனை­கிறது.

ஆனால் சில மாநில அர­சாங்­கங்­கள் தங்­க­ளது மாநில எல்­லை­க­ளுக்­கான பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்­கி­யுள்­ளன.

நியூ சவுத் வேல்சில் ஓமிக்­ரான் தொற்­றுக்கு ஆளா­னோர் எண்­ணிக்கை 13ஆக உயர்ந்­துள்­ளதோடு, குயீன்ஸ்­லாந்­தி­லும் தென்­னாப்­பி­ரிக்­கா­வில் இருந்து சென்ற ஒரு­வ­ருக்கு ஓமிக்­ரான் தொற்று உள்­ள­தாகவும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் முதல் உள்­ளூர் ஓமிக்­ரான் தொற்று சம்­ப­வம் சிட்னி பள்­ளிக்­கூ­டம் ஒன்­றில் நேற்று முன்­தி­னம் பதி­வா­னது.

இந்­நி­லை­யில், நியூ சவுத் வேல்ஸ், விக்­டோ­ரியா, சிட்­னி­யில் இருந்து செல்­வோர் கிரு­மித்­தொற்று பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்று தெற்கு ஆஸ்­தி­ரே­லிய அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கிட்­டத்­தட்ட 88 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

இருப்­பி­னும் விக்­டோ­ரி­யா­வில் தீவிர சிகிச்சை பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள 44 பேரில், 90 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் என்று அந்­நாட்­டின் சுகா­தா­ரத் தக­வல்­கள் கூறு­கின்­றன.

இதற்­கி­டையே, தடுப்­பூ­சிக்கு எதி­ரா­க­வும் ஆத­ர­வா­க­வும் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஒவ்­வொரு வார­மும் ஆர்ப்­பாட்­டங்­கள் நடந்­து­கொண்டு இருக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!