கோலாலம்பூர்: மலேசியாவிற்கு சீனா மேலும் இரண்டு மில்லியன் தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக சீனாவிற்கு அரசுமுறை பயணம் சென்றுள்ள மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதின் அப்துல்லா சொன்னார்.
கிருமித்தொற்றுக்குப் பிந்தைய ஒத்துழைப்பு குறித்து நடந்த உயர்மட்ட குழு பேச்சுவார்த்தைக்குப் பின் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் சைஃபுதீன் இவ்வாறு சொன்னார்.
அத்துடன், தடுப்பூசி ஆராய்ச்சி, உற்பத்தி ஆகியவற்றிலும் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் அவர் சொன்னார்.
இதனால் சொந்தமாகத் தடுப்பூசி தயாரிக்கும் மலேசிய பிரத
மரின் திட்டம் கைகூடும் என்
பதையும் அவர் சுட்டினார்.
அத்துடன் தென் சீனக் கடலில் அமைதி, நிலைத்தன்மையைக் கட்டிக்காப்பதற்கான முக்கியத்துவத்தை மலேசியாவும் சீனாவும் அச்சந்திப்பின்போது வலியுறுத்தின.
தென் சீனக் கடல் பகுதியானது இரு நாடுகளின் ஆழமான உறவின் ஒரு சிறிய பகுதி என்பதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக சைஃபுதின் கூறினார்.
மலேசிய மாணவர்கள் படிப் படியாக சீனாவிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.

