வெளிநாட்டினருக்கான தடையை மேலும் கடுமையாக்கியது தென்கொரியா

சோல்: தென்­கொ­ரி­யா­வில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வோ­ரின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் பெரு­கிக்­கொண்டே போகிறது. இத­னைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக வெளி­நாட்­டி­னருக்கான கட்­டுப்­பா­டு­கள் நேற்று முதல் கடு­மை­யாக்­கப்­பட்­டது.

இதன்­படி தென்­கொ­ரி­யா­வில் வசிக்கும் வெளி­நாட்­டில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட வெளி­நாட்­டி­னர் உண­வ­கங்­கள், திரை­ய­ரங்­கு­கள் உள்­ளிட்ட இடங்­க­ளுக்­குச் செல்ல தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஏற்­கெ­னவே அவர்­கள் உடற்­ப­யிற்சி கூடங்­க­ளுக்­கும் மது­பா­னக்­கூ­டங்­க­ளுக்­கும் செல்­வ­தற்கு மட்­டுமே தடை விதிக்­கப்­பட்­டு­இருந்­தது.

அதே­ச­ம­யம் வெளி­நாட்­டில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட கொரிய குடி­மக்­க­ளுக்கு இந்த தடை பொருந்­தாது.

ஆனால் தனி­மைப்­ப­டுத்­த­லில் இருந்து விலக்கு அளிக்­கப்­பட்டு தென்­கொ­ரி­யா­விற்­குள் அனு­மதிக்கப்­பட்ட வெளி­நாட்­டி­னரைத் தவிர மற்­ற­வர்­க­ள் இத்­த­டைக்கு உட்­பட வேண்­டும்.

தென்­கொ­ரி­யா­வில் தடுப்­பூசி போடும் பணி தொடங்­கு­வ­தற்கு முன், வெளி­நாட்­டில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட வெளி­நாட்­டி­னர் இத­னால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இது­பற்றி வெளி­நாட்டுத் தூத­ரகங்­கள் கவ­லை­ய­டைந்­தி­ருந்­தா­லும் இத்­த­டையை நீக்­கு­வ­தற்­கான அவர்­க­ளின் முயற்­சி­யால் எந்த முன்­னேற்­ற­மும் இல்லை.

"வெளி­நாட்­டில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட கொரிய குடி­மக்­க­ளை­யும் வெளி­நாட்­டி­ன­ரை­யும் சம­மாக நடத்­த­வேண்­டும் என்­பது குறித்து தொடர்ந்து பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கி­றோம்," என்று ராய்ட்­டர்­சி­டம் சோலில் உள்ள பிரிட்­டி‌ஷ் தூத­ரக செய்­தித்தொடர்­பா­ளர் ஸ்டீ­பன் பர்ன்ஸ் சொன்­னார்.

இது­தொ­டர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக ஆஸ்­தி­ரே­லிய தூத­ர­க­மும் தெரி­வித்­தது.

ஆனால், தென்­கொ­ரிய நோய் கட்­டுப்­பாட்டு, தடுப்பு மையமோ, இந்­ந­ட­வ­டிக்கை கார­ண­மாக மிக­வும் குறை­வா­ன­வர்­களே பாதிக்­கப்­ப­டு­வார்­கள் என்­கிறது.

ஆனால் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் தனி­யாக அமர வேண்­டும் என்­ப­தைத் தவிர, அவர்­கள் உண­வ­கங்­க­ளுக்­குச் செல்ல எந்த தடை­யும் இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!